Tuesday, September 2, 2008

வலையுலக ஜே.கே. ரித்தீஷ்

ஏன் இவ்வளவு நாளாக ஆளைக் காணோம்?

நெடிய சுற்றுலா போயிருந்தேன். மலேசியாவுக்கு. கேமரான் மலை, பினாங்கு தீவுகள், கோலாலம்பூர் என்று உல்லாசத் திரிதல். அற்புத மது ரகம். சீன, மலேய, இந்தோனேசிய பெண்கள் பலருடன் சினேகம். பிளாக் பக்கம் வரவே இல்லை. ஒன்றரை மாதத்துக்குப் பின் திரும்பி வந்து பார்த்தால்....

பார்த்தால்?

அவ்வளவு டல். ஒரு பத்து பதினைந்து பேர் மட்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மாறி, மாறி ராவடி. மாத்தி மாத்தி முதுகுசொறி பின்னூட்டம். அலுப்பாக இருக்கிறது. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என பேரறிந்த எழுத்தாளர்கள் வந்து சுவாரஸ்யமும் காத்திரமும் மிகுந்த பதிவுகள் போடுவதால் பல ஸ்டீரியோடைப் பதிவர்கள் சோபை மங்கி போய்க் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் இணையத்துக்கு வலியப் போய் நல்லா இருந்ததுங்க என்று ஒரு லெட்டர் போட்டு பாராட்டிவிட்டு, கூடவே தன் இணைய முகவரியும் கொடுத்து விடுகிறார்கள். விளம்பரம் கிடைக்கும் ஆசையாக இருக்கும். பாவமாக இருக்கிறது.

இப்படி இருந்தால் இணைய தமிழ் அடுத்த கட்டத்துக்கு போகுமா?

ஆனந்தவிகடனில் என் எழுத்து வந்திருக்கு. என் போட்டோ வந்திருக்கு என்று புளகாங்கிதம் அடைந்து அல்லவா பதிவு போடுகிறார்கள். அச்சு உலகைத் தாண்டியவர்கள் என்று ஜம்பமாக இருக்க வேண்டியவர்கள் இப்படி அசடு வழிந்துகொண்டு, அச்சுவேட்கையர்களாக இருக்கும்போது அடுத்த கட்டமாவது மண்ணாங்கட்டியாவது.

சமீபத்தில் படித்து நொந்த பதிவு?

ஆனந்த விகடன் அட்டைப்படத்தை பாத்து நானே வரைஞ்சது என்று ஒருவர் அச்சமூட்டும் பெண் படத்தைப் போட்ட பதிவு. அதற்கு, மூக்கு சரியா வந்திருக்கு. பட் உதடுதான் பெரிசா போச்சு என்று சீரியசாக பின்னூட்டம் போட்ட சில பதிவர்கள். இதையும் சூடான இடுகைகள் பகுதிகள் போட்ட தமிழ்மணர்கள். இவர்களுக்கு ரெண்டு சூடான இடுகை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

அசத்தியது?

பெரியாரின் வானொலி பேட்டியையும் அவரது காரைக்குடி, கும்பகோண பொதுக்கூட்ட உரையையும் ஒலிப்பதிவாக போட்ட அந்த பதிவு. இப்போது தட்டச்சு செய்கையில் பதிவின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும். பெரியாரின் குரலைக் கேட்டது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வலையுலக ஜே.கே. ரித்தீஷ் என்று யாரைச் சொல்லலாம்?

லக்கிலுக்

வெளிநாட்டு பயண அனுபவ பதிவு போடுவீர்களா?

மாட்டேன். (இப்போதைக்கு).

விநாயகர் சதுர்த்தி?
அது விடுமுறைநாள் ஆயிற்றே.

ங்கொய்யால...நீ பெரிய புல்டாக்கா?

................................

9 comments:

करिश्मा said...

विंडोस विस्टा ने अपने लॉंच के बाद से अब तक कोई खास करिश्मा नही दिखाया है. अभी भी अधिकतर विंडोस प्रयोक्ता विंडोस एक्स.पी. को ही पसंद करते हैं. हालाँकि माइक्रोसॉफ्ट ने विस्टा के बाद अगले विंडोस संस्करण पर काम शुरू कर दिया है.

लेकिन एक खबर यह भी है माइक्रोसॉफ्ट अपने लोकप्रिय विंडोस ऑपरेटिंग सिस्टम को ही तिलांजली देने वाला है, और एक नए और आधुनिक ऑपरेटिंग सिस्टम मिडोरी पर काम कर रहा है.

मिडोरी विंडोस से इस मामले में काफी अलग होगा कि उसका संचालन पूरी तरह से इंटरनेट के माध्यम से होगा.

माइक्रोसॉफ्ट का कहना है कि उसका नया ऑपरेटिंग सिस्टम भविष्य का ऑपरेटिंग सिस्टम होगा. इस समय किसी भी ऑपरेटिंग सिस्टम को हार्ड डिस्क मे इंस्टॉल करना होता है, यानि कि वह ऑपरेटिंग सिस्टम केवल एक कम्प्यूटर सिस्टम तक सीमित हो जाता है.

लेकिन आज के युग का प्रयोक्ता जो कि लगातार अलग अलग जगहों पर अलग अलग पीसी के उपर काम करता है, को अपने हर पीसी का आवरण एक जैसा चाहिए होता है. मिडोरी इस कमी को पूरा कर सकेगा.

अपुष्ट खबर के मुताबिक माइक्रोसॉफ्ट के इंजीनियर मिडोरी के उपर काम कर रहे हैं और उन्हे उल्लेखनीय सफलता भी मिली है.

rapp said...

அட ஊருக்கு போயிட்டு வந்தவுடன் சூடான இடுகைல வரணும்னு ஆசைப்படறீங்களா? கரெக்டா டிரெண்டு பிடிச்சிட்டீங்க, வாழ்த்துக்கள். தலைப்புல எங்க தல பேர போட்டாலே போதும்தான்னாலும், லக்கிலுக் பேரயும் சேர்த்து தலைப்பில் போட்டிருந்தீங்கன்னா இன்னும் சீக்கிரம் சூடோ சூடாகி, ரொம்ப நேரம் அங்க இருந்திருக்கும். ஆனாலும் எங்க தல தனியாவே சமாளிப்பாருங்கர நம்பிக்கயிருக்கு :):):)

Anonymous said...

ஒரு முடிவோடதா வந்திருக்கீங்க!!!

லக்கிலுக் said...

அண்ணாத்தே!

ஒரிஜினல் பிலாக்லே எழுத டைமு இல்லை. இதில் எழுத ரொம்ப டைமு கிடைக்குதோ? :-)

பொய்யன் said...

அண்ணாத்தே. எனது ஒரே பிளாக் இது மட்டுமே. நீங்கள் வேறு யாரையோ மனதில் கொண்டு குழம்பி இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். அதேபோல் மேலே உள்ள ஹிந்தியில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாராட்டா, திட்டா என்றே புரியவில்லையே. ஹிந்தி தெரிந்த யாராவது சொல்லுங்கள். ப்ளீஸ்.

Anonymous said...

ச்சே... எவனோ வெளங்கா மண்டையன்... வேலையில்லாம போட்டிருக்கான், அத நானும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் தேடிப் புடிச்சு மாத்தியிருக்கேன்.


Translated...


After his लॉंच vista विंडोस has so far not shown any serious charisma. Most users विंडोस still विंडोस एक्स.पी. Only like to have. Although Microsoft has vista after the next version of विंडोस begun work.

But the news is a Microsoft operating system to its popular विंडोस a तिलांजली, and a new and more modern operating system has been working on मिडोरी.

मिडोरी in this case very different from विंडोस that it will be fully operational through the Internet.

Microsoft says that its new operating system will be the future of the operating system. At present, any operating system to install in the hard disk is that the operating system means that only one computer system is limited.

But today's age of a user who is constantly different places, different from the PC to above works, the PC to your every need is just as a cover. Will be able to meet the shortfall मिडोरी.

According to unconfirmed news of Microsoft's engineers are working मिडोरी the above them and also got a remarkable success.

பொய்யன் said...

அன்பான அனானிக்கு

அட...ங்கொக்காமக்கா இதை தானா அனுப்பியிருக்கான். டிரான்ஸ்லேட்டர் எல்லாம் போய் எனக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையைக் கண்டு என் கண்ணில் நீர் நிறைகிறது. சாவகாசமாக இருக்கும்போது வாருங்கள். ஷிவாஸ் ரீகலோடு காத்திருக்கிறேன்.

களப்பிரர் said...

//ஷிவாஸ் ரீகலோடு காத்திருக்கிறேன்.//

தலை, இந்த சரக்க எங்க வாங்குறது ??? எங்க ஊர்ல (மதுரை பக்கம்) ராயல் செல்லஞ்சே கிடைக்க மாட்டேங்குது ...

பொய்யன் said...

மதுரை வக்புவாரிய கல்லூரிக்கு பக்கத்துல நாஞ் சின்னப்புள்ளையா இருந்தப்போ, இஞ்சி வாங்கி அடிச்சிருக்கேன். ஷிவாஸ் ரீகல் எல்லாம் அதுக்கு முன்னால ஜுஜுபி. களப்பு அப்படி கௌப்பும் சரக்கு அது. சாப்டிருக்கேளா?