Monday, September 22, 2008

டோண்டு ராகவனிடம் 2 கேள்விகள்

வலையுலகின் புதியவனான எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லப்போனால் கவனிக்கக்கூட மறந்துவிட்டேன். ஆம். நான் ஐம்பது பதிவுகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன். இது 54வது பதிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. முதல் பதிவு என்ற ஒற்றை வரியோடு என் முதல் பதிவை எழுதினேன். அது பல அர்த்த விரிவுகளுக்கு இட்டுச் சென்றதாக பல நண்பர்கள் கூறினர். இந்த ஐம்பது பதிவு கால இடைவெளியிலே எவ்வளவோ நிகழ்வுகள். திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு செய்திருக்கிறோமோ என்று என்னையே வியந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

என் பதிவுகளிலேயே எனக்குப் பிடித்த பதிவு என்று சுட்டிக் காட்டச் சொன்னால் இரு பதிவுகளை குறிப்பிடுவேன். ஒருமுறை தமிழ்மணம் திறந்து பலர் பதிவுகளைப் படித்தே நள்ளிரவு ஆகிவிட்டது. மிக தூக்கமாக வந்தது. எனவே தூக்கம் வருகிறது தூங்க போகிறேன் என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு ஒரு அனானி குட்நைட் என்று பின்னூட்டம் இட்டார். அந்த அன்பில் உண்மையிலே கரைந்து போனேன். மற்றொரு அன்பர் விதேச பாஷையில் பின்னூட்டி நலம் விசாரித்தார். ஒரு பிளாக்கராக இருப்பதன் விழுமியத்தை நான் அறிந்த தருணம் அது. மற்றொரு பதிவு ரிமைண்டர். பொதுவாக ஒரு நாளில் நான் செய்ய உத்தேசித்துள்ள வேலைகளை எனது மொபைல் போனில் குறித்து வைப்பது வழக்கம். அப் பதிவிட்ட சமயம் என் மொபைல் சார்ஜரில் இருந்தது. எனவே ரிமைண்டரை ஒரு பதிவாகவே வெளியிட்டேன். உலகத் தமிழர்கள் அனைவரும் அதை படித்து அறிந்தார்கள் என்பதே நான் ஒரு வலைப்பதிவாளனாக இருப்பதன் அர்த்தத்தை எனக்கு விளக்கியது.
இந்த ஐம்பதாம் பதிவு கொண்டாட்டத்தை ஒட்டி, நெடுநாளாக என் மனத்தில் இருப்பதை வெளியிட துணிபு கொண்டுள்ளேன். வெகுமூத்த பதிவரான டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என நான் வலையுலகுக்கு வந்த காலத்தில் இருந்தே நினைத்து வருகிறேன். ஆனால் மிக ஜுனியரான நான் எப்படி அதைக் கேட்பது என்று இயல்பிலேயே என்னுள் உள்ள தயக்கமும் சங்கோஜமும் என்னை தடுத்துவந்தது. ஒருமுறை என் பதிவில் பின்னூட்டிய டோண்டு அவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் நுட்பம் குறித்து சொல்லியிருந்தார். அப்போதுகூட கேட்க நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் ஐம்பது பதிவுகள் கடந்த நிலையில் வலையுலகில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைத்த தன்னம்பிக்கையோடு
டோண்டு ராகவனிடம் என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

கேள்வி நெ.1 : கம்ப்யூட்டர் துடைப்பதற்காக வைத்திருக்கும் மஞ்சள் துணியை நன்றாக விரித்துவைத்துதான் துடைக்க வேண்டுமா? மடக்கிய நிலையிலேயே துடைக்கலாமா?

கேள்வி நெ.2 : ஒருமுறை ஷட்டவுன் செய்யாமல் அப்படியே சுவிட்சை ஆப் செய்துவிட்டேன். இதனால் கம்ப்யூட்டருக்கு கெடுதி ஏதும் உணடா?

12 comments:

Anonymous said...

அய்யா இது உலக மொக்கை !!! நடத்துங்க !!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எப்படிய்யா இப்படி சீரியஸா நக்கலடிக்கறீங்க???

பொய்யன் said...

Thanks mr. Redflame ravi

பொய்யன் said...

Dear jyovji

thanks 4 coming. u know its realy serious ya....

Anonymous said...

http://charuonline.com/sep08/Poyyan.html---elavasa vilambaram.

Anonymous said...

just red about yr blog in Charu online, good

mothirakaila kuttu viluthirukku,
nalla vaangikittu, vlaraungal.

Valthukaladun, Sureshkumar

Ramesh said...

வணக்கங்கள்!

நல்லாவே இருக்கு!

Anonymous said...

Good work, keep it up.

Thanush said...

சாரு இப்படி புகழ்கிறாரே என்று தங்கள் வலைதளம் சென்றேன். ஆகா என்ன நகைச்சுவை! சலவைக்காரி ஜோக் சூப்பரோ சூப்பர்! விஜயகாந்த் ஜோக் சூப்பரோ சூப்பர்! சூப்பர்!! வாழ்க குசும்புடன் தலிவா!

Thanush said...

சாரு இப்படி புகழ்கிறாரே என்று தங்கள் வலைதளம் சென்றேன். ஆகா என்ன நகைச்சுவை! சலவைக்காரி ஜோக் சூப்பரோ சூப்பர்! விஜயகாந்த் ஜோக் சூப்பரோ சூப்பர்! சூப்பர்!! வாழ்க குசும்புடன் தலிவா!

Anonymous said...

சாரு இப்படி புகழ்கிறாரே என்று தங்கள் வலைதளம் சென்றேன். ஆகா என்ன நகைச்சுவை! சலவைக்காரி ஜோக் சூப்பரோ சூப்பர்! விஜயகாந்த் ஜோக் சூப்பரோ சூப்பர்! சூப்பர்!! வாழ்க குசும்புடன் தலிவா!

Anonymous said...

சாரு இப்படி புகழ்கிறாரே என்று தங்கள் வலைதளம் சென்றேன். ஆகா என்ன நகைச்சுவை! சலவைக்காரி ஜோக் சூப்பரோ சூப்பர்! விஜயகாந்த் ஜோக் சூப்பரோ சூப்பர்! சூப்பர்!! வாழ்க குசும்புடன் தலிவா!