Thursday, June 26, 2008

காம அரசியலை முன்வைத்து

காமம் என்றால் என்ன? ஆணுடலும் பெண்ணுடலும் இணைவது. அதாவது பெண்
ண¤ன குறிக்குள் ஆணின குறி பொருந்தி, உள்சென்று, முன்பின் இயக்க அசைவுகள் மூலமாக ஆணின விந்துப் பையில் இருந்து உருவாகும் விந்தணுக்களை பெண்ணின கருஉருப் பாதைக்குள் செலுத்தும் செயல். இதுதொடர்பாக சில முன் விளையாட்டுகளும் உள்ளன. அவை முத்தம், வருடுதல், தடவுதல், கிள்ளுதல் என்பதான பல்வகை அம்சங்கள் கொண்டவை. மரபுசார் புணர்ச்சியைப் போல் வரம்புகடந்த புணர்ச்சி நிலைகளும் உள்ளன. இவ்வளவுதான் காமம். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து காம அரசியலுக்குள் புகுந்து புறப்படுகிறேன் பேர்வழி என்று பத்துப்பாடடு, எட்டுத்தொகை காலத்துக்குள்ளும், மக, மவுரியப் பேரரசுகளின் ஊடாகவும் சமண, பவுத்த மார்க்க வழியாக தவ, விரத, நோன்பு நிலைகளை முன்னெடுத்தும் பாலியல் வரலாறு அதன் நுண்ணரசியல் செயல்பாடு என சில பதிவர்கள் மிக நீண்ட பதிவிட்டு, என¢ போன்று வாழ்வை ஒவ்வொரு நிமிடத் துளியும் சுவைத்து களிப்பவர்களை கடுப்பேற்றுகிறார்கள். இதுபோன்ற காம அரசியல் பதிவுகளைப் படித்தால் உங்களுக்கு குறி தளர்ந்து, சுருங்கி, அது விவசாயிகளின் நண்பன்Õ போல் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறேன். பெண் பதிவர்களுக்கு சாபம் விடக்கூடாது என¢ற நல்நோக்கில் நாகரீகம் கருதி சொல்லாது விடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ங்கொய்யால...லீவுல டூரு போய் முடிச்சிட்டு வந்து பிளாக்குகளைத் தொறந்து பார்த்தா ஒரே காமக் கிடங்கா கெடக்குது. அந்த வெறுப்பில் வந்த பதிவு இது. இதற்கான மூலப் பதிவு என்ன என்பதை நீங்களே ஒரு பைத்தியக்காரனைப் போல் தேடிப் பிடித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Thursday, June 12, 2008

தசாவதாரம் பாத்துட்டேளா....

இன்றைய தேதியில் மிக முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது, தசாவதாரம் படத்தின் கதை என்ன என்பதுதான். நேற்றே பிரிவியூ பார்த்துவிட்டு கிறங்கிப் போய் வந்த நண்பர்கள் சிலரிடம் நேர் பேச்சிலும் தொலைபேசி வாயிலுமாகக் கேட்டேன். கதைச் சுருக்கம் சொல்லுங்கள் என்று. யோசித்துச் சொல்கிறோம். 16 மணி நேரம் டைம் கொடு என்கின்றனர். 17&ம் நூற்றாண்டு, ஜார்ஜ் புஷ் என்று ஒரு இளம் நண்பி ஏதேதோ புலம்பிக் கொண்டுள்ளார். என் பிரார்த்தனை எல்லாம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாணு போல் ஆகிவிடக் கூடாது என்பதுதான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் லீவ். கேரளக் கடற்கரை நகரங்கள், வயநாடு வழியாக மைசூர், குடகு வரை சென்று வர ஒரு டூர் ஏற்பாடு. வருவதற்குள் யாராவது கதை கண்டுபிடித்து பதிவு போட்டு வையுங்கள். வந்து பார்த்துக் கொள்கிறேன்.

Tuesday, June 10, 2008

கக்கூஸ் சுவத்ல எழுதறவன்தான் அனானி

ஊரில் சினிமாத் தியேட்டர் மற்றும் பஸ் நிலைய கழிப்பறைச் சுவர்களில் 'கலாவுக்கும் கோபுவுக்கும் கள்ளக் காதல்', 'ஒண்டுக்கிருந்துவிட்டு ஒருமுறை சுண்டாவிடில் நிண்டொழுகுமாம் சலம்', 'அமிர் எங்கள் உயிர், நவம் எங்கள் மயிர்' என்றெல்லாம் சொற்களை எழுதுவதில் இன்பமடையும் கூட்டமொன்று உண்டு. இது ஓர்வகையான மனப் பிறழ்வும்கூட. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்¢ள பொதுக் கழிவறைகளில் இவ்வாறெல்லாம் எழுதி இன்பமுற வாய்ப்பில்லாததால் நீங்கள் இணையதளங்களில் பின்னூட்டம் எழுதி மகிழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களையிட்டுக் கோபப்படுவதைக் காட்டிலும் உங்கள் மீது இரக்கம்கொள்வதே சரியாயிருக்கும்.
மேற்கண்ட பத்தி, யமுனா ராஜேந்திரன் என்பவரை தும்பு தும்பென தும்பிக் கிழித்து ஷோபாசக்தி எழுதிய கட்டுரையில் உள்ள ஒரு பகுதி. முகத்தை மறைத்துக்கொண்டு என்மீது மட்டுமல்லாமல் யமுனா மீதும் மற்றவர்கள் மீதும் ஆதாரமற்ற பின்னூட்டக் கற்களை எறிபவர்களுக்கு ஒரு வார்த்தை என்று தொடங்கி, அவதூறு அனாமிகளுக்கு இந்த சாட்டையை வீசியிருக்கிறார் ஷோபாசக்தி.
அவர் எழுதிய கட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்கும் அளவுக்கு நுட்பம் எனக்கு இன்னும் கணிணியில் கைவரப்பெறவில்லை. எனவே நீங்களே தேடிக்கொள்ளுங்கள். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

Saturday, June 7, 2008

முதல் உலகப் போர்னா இன்னா....

வீக்எண்ட். நல்லவேளை நண்பர் கூட்டத்தில் இருந்து தப்பி விட்டேன். வீட்டில் அம்மாவும் இல்லாததால் சர்வசுதந்திரம். தணுத்துக் குளிர்ந்த பீரை உள்ளிறக்கிக் கொண்டே கணிணி இயக்கிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டு மாமி உள்ளே வந்தார். எனக்கு ரொம்ப நெருக்கம். என்னடா பண்ணிட்ருக்கே என்றார். பிளாக் விவரம் எல்லாம் தெரியாதவர். சும்மா கட்டுரை எழுதிப் பாக்றேன் என்றேன். எங்கே காமி. மிடில் கிளாஸ் கே.கே வை காண்பித்து வைத்தேன். பிலுபிலுவென பிடித்துக்கொண்டார். என்ன எழவுடா இது. இப்படியெல்லாமா எழுதறது. நாலு விஷயம் தெரிஞ்சுக்கற மாதிரி எழுது. ஜென்ரல் நாலெட்ஜ் வளக்குற மாதிரி எழுதணும்டா என்று தொடங்கி ஏகப்பட்ட லெக்சர் கொடுத்து கிளம்பிவிட்டார். மனதே வெறுத்துவிட்டது. சரி ஒரு சேஞ்சுக்காக நமக்கு பிடித்த டஜன் பாயிண்ட் கணக்கை வைத்து ஒரு சீரியஸ் பதிவு போடலாம் என தீர்மானித்து விட்டேன். மாமிக்காக ப்ளீஸ் மன்னித்து விடவும்.

உலகின் மகா சீரியஸ் விஷயமாகி, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட முதலாம் உலகப் போர் பற்றி நண்பர்களே இப்போது பார்க்கலாமா.... (தோரணை வந்துவிட்டது பாருங்கள்).

முதல் உலகப் போர் (1914 - 1918)

1. ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாந்தும் அவனது மனைவியும் 1914 ஜுன் 18ல் காரில் போகும்போது செர்பிய நாட்டவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா படை எடுத்தது.

2. நாடு பிடிக்கும் வெறியில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் குதித்தது. ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் இணைந்தன.

3. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் ஈடுபட்டன.

4. 1914 ஆகஸ்ட் 4ல் முதல் உலகப் போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ரகசியமாக பிரான்ஸ், பிரிட்டனுக்கு ஆதரவளித்தது. இதனால் கடுப்பான ஜெர்மனி, அமெரிக்க கப்பல்களை குண்டுபோட்டு மூழ்கடித்தன. இதனால் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக¢கா போரில் குதித்தது.

5. நீர் மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் நேச நாடுகளை துவம்சம் செய்தது ஜெர்மனி.

6. போர்க்காலத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்து லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமானது. 1917ல் ஜெர்மனியுடன் லெனின் அரசு சமாதான உடன்படிக்கை செய்து போரில் இருந்து விலகியது.

7. போரில் ஜெர்மனி விஷ வாயுவைப் பயன்படுத்தி உலகை அதிர வைத்தது.

8. முதலில் ஜெர்மனிதான் வெற்றிகளை ஈட்டி வந்தது. ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பெரும் பலத்துடன் ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

9. இதனால் ஜெர்மனி மக்கள் அரண்டுபோய், மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் இறங்கினர். சொந்த மக்களை ராணுவத்தைக் கொண்டு சுட்டுக் கொல்லவைத்தார் கெய்சர்.

10. 1918 நவம்பர் 11-ம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குள் நுழைந்தன நேச நாடுகளின் படைகள். ஜெர்மனி சரண் அடைந்தது. மன்னர் கெய்சர் ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

11. முதல் உலகப்போர் மொத்தம் 1561 நாட்கள் நடந்தது. 2 கோடி பேர் இறந்தனர். போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலுக்கு 2 கோடி மக்கள் மடிந்தனர்.

12. போருக்கு காரணமான ஆஸ¢திரியா பல்வேறு இன மக்களைக் கொண்டது. முதல் உலகப் போருக்கு பிறகு ஆஸ்திரியா துண்டுதுண்டாகச் சிதறியது.

ஸ்ஸ்ஸ்...அப்பா...எவ்வளவு சீரியஸான பதிவு. ச்ச்சீ...போங்க எனக்கே வெக்கமா இருக்கு.

Friday, June 6, 2008

மிடில்கிளாஸ் கேனச்சிகளை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. சிக்னலில் நிற்கும்போது ஸ்கூட்டி இன்ஜினை ஆப் செய்பவள்.

2. கோயில் சிதறு தேங்காயை காலை சட்னிக்கு உபயோகிப்பவள¢.

3. தன் பிறந்தநாளுக்கு ஐபாட் பரிசு வாங்கி, அதை வாங்கித் தந்தவன் பிறந்தநாளுக்கு யாஹ§ மெயிலில் கார்டு அனுப்புபவள்.

4. அட்சய திரிதியைக்கு ஜி.ஆர். தங்கமாளிகையில் கால்பவுன் மோதிரம் வாங்குபவள்.

5. பாண்ட்ஸ் பவுடர் பூசுபவள்.

6. சினிமா இடைவேளையில் பாப்கார்னும் கோன் ஐஸ§ம் மறக்காமல் கேட்பவள்.

7. போத்தீஸில் 800 ரூபாய்க்கு சுடிதாரும் ரங்கநாதன் தெருவீதியில் பத்து ரூபாய்க்கு மூணு பேண்டீஸ§ம் வாங்குபவள்.

8. ஆண் நண்பர்களுடன் பைக்கில் போகும்போது ஹேண்ட்பேக் இன்னபிற வஸ்துக்களால் நடுவில் தடுப்பரண் அமைப்பவள்.

9. இளநீர் வாங்கி தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பினால், தேங்காய் விள்ளல்களை பொட்டலம் கட்டச் சொல்பவள்.

10. ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை கைப்பையில் வைத்திருப்பவள்.

11. வீட்ல இருக்கும்போது போன் பண்ணாதீங்க ஆத்தா வய்யும் என்பவள்.

12. கன்னத்தில் மட்டும் முத்தம் இடுபவள்.

Thursday, June 5, 2008

மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. பனியன் போட்டிருப்பவன்.

2. ஹமாம¢ சோப் தேய்ப்பவன்.

3. சட்டைப் பையில் நீலக்கலர் மூடி தெரியும்படி ரெனால்ட் பேனா வைத்திருப்பவன்.

4. பெல்ட்டில் உறை போட்டு செல்போன் வைத்திருப்பவன்.

5. டிசம்பர் கடைசியில் டைரி, காலண்டர் கிடைக்குமா என பார்ப்பவரிடம் எல்லாம் கேட்பவன்.

6. சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவன்.

7. பைக்கின் சைடில் பெட்டி வைத்திருப்பவன்.

8. பிஸ்லரி தண்ணீர் தீர்ந்ததும் பாட்டிலை மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வருபவன்.

9. ரிமோட்டுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பவன்.

10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்.

11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன்.

12. என் மகன் எஸ்எஸ்எல்சியில் 405 மார்க் என்று எஸ்எம்எஸ் அனுப்புபவன்.

Sunday, June 1, 2008

இலங்கை சாராயத்தின் அடிமை நான்

நேற்றிரவே இப் பதிவைப் பதிய நினைத்தேன். ஒரு நாள் தாமதம். நாள் ஒன்று நீண்டிருப்பினும் நினைக்குந்தோறும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அதன் மகாத்மியமாகவும் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த நண்பன் ஒருவன் நாளிதழில் சுருட்டி வைத்திருந்த ஒரு போத்தலைக் கொடுத்தான். இலங்கைச் சாராயம் என்றான். சாராயம் குறித்து இதுவரை எனக்கு ஒரு பயப்பிராந்தியே இருந்தது. இந்திய தயாரிப்பு மற்றும் விதேச தேசத்தின் முதன்மையான மதுக்கள் அனைத்தையும் பருகி இருக்கிறேன். எனினும் சாராயம் மீது ஓர் அச்சமே இருந்தது. குறிப்பாக அதன் நெடி. பிறகு அது தயாரிக்கும் விதம் குறித்து சொல்லப்படும் கதைகள். பேட்டரிக்கள், அழுகிய பழம், விஷ ஜந்துகள் இத்யாதி. அதனால் நெருங்காதே இருந்தேன்.
தயக்கத்தோடுதான் நாளிதழ்ச் சுருளைப் பிரித்தேன். நீண்ட வெண் பாட்டில். உள்ளே படிகத் தெளிவில் திரவம். பெயர் வைற் டயமண்ட். குவளையில் சிறிது நிரப்பி, தூய நீர் கலந்து பருகினால்...ஆஹா அற்புதம். அதன் வாசனை. நேர்த்தியாய் நெஞ்சுக் குழியில் பாய்ந்து இறங்கும் சுகம். மெலிதாய் கிளர்ந்து பரவும் போதை.
நன்றாய் இருந்தது என்பது சாதாரண வார்த்தை. வேறு தெரியவில்லை. எனவே நன்றாய் இருந்தது. போத்தலில் இருந்த தமிழ் வாசகம் இன்னும் போதையேற்றியது. வைற். சாராய ஸ்ட்ரெங்க்த் அளவும் குறிக்கப்பட்டிருந்தது. அதன் தமிழ் -சாரம். சாராயத்தின் சாரம். போதை ஏறாதா என்ன.
இலங்கையின் தமிழ் மீது எனக்கு மாறாக் காதலே உண்டு. என் கனவு பூமி அது. இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட அங்கு சென்றது இல்லை. ஆனால் எனக்கு நெருங்கிய தேசமாகவே அது மனதுக்குள் கிடக்கிறது. சிறு பிராயத்தில் இலங்கை வானொலி என் வாழ்வில் ஓர் அங்கம். புலர்பொழுதிலே பொங்கும் பூம்புனல் எனத் தொடங்கும் அதன் ஒலியலைகள் நாள் பூராவும் எங்கள் வீட்டில் அதிர்ந்து கொண்டேயிருக்கும். பிறந்த நாள் வாழ்த்துக்காக அம்மா, அம்மம்மா, அப்பப்பா, தம்பி, மாமா என்று மொத்தக் குடும்பமும் வாழ்த்திக் கொண்டிருக்கும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் புகழ்பெற்றது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று கோபால் பல்பொடி விளம்பரங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கும். இரவின் மடியில் தாலாட்டைக் கேட்டுத்தான் தூங்குவோம்.
அப்போது வந்த, எல்லோரையும் ஈர்த்த வானொலி விளம்பரம் ஒன்று கூட நினைவுக்கு வருகிறது. அங்கிள் எனக்கு மனசே சரியில்லை என்று மழலையில் ஒரு குழந்தை கொஞ்சிச் சொல்லும். மனசு சரியில்லை என்பது பெரியவர்களுக்கான வார்த்தை. அதை மழலைக் குரலில் கேட்கும்போதே மனது உருகிவிடும். அடுத்த நிமிடமே கணீர்க்குரலில் ஒருவர் சொல்வார், அப்படிச் சொல்லவேணாம் புள்ள ...ஸ்டார் டொபி சாப்பிடுங்கோ என்று. ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். சரியான விளம்பர வாசகம் தெரியவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் எனக்குப் பிடித்த மற்றொன்று பொப்பிசைப் பாடல்கள். பாப் பாடல்களைத்தான் அப்படிச் சொல்வார்கள். தமிழ்நாட்டின் பாப் பாடல்கள் காது கொண்டு கேட்கச் சகியாது. ஆனால் இலங்கை பொப்பிசைப் பாடல்கள் ரெஹ்னாவின் அம்பர்லா கேட்ட மயக்கத்தைக் கொடுக்கும்.
சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. சின்ன மாமியா உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ. மற்றொன்று அறிவுரைப் பாடல். கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. காலைப் பிடித்து கெஞ்சுகிறேன். கண்கள் வறண்டிடும். கைகால் தளர்ந்திடும். நெஞ்சும் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும்.
திரைப்பாடல்களின் முதல் பத்து வரிசைப்படுத்தல்கள் நிகழ்ச்சியை
இலங்கை வானொலியில்தான் முதலில் செய்தார்கள். இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளின் கிட்டத்தட்ட அத்தனை நிகழ்ச்சிகளும் இலங்கை வானொலியின் காப்பிதான்.
இன்னும் நினைவு எங்கெங்கோ செல்கிறது. சாராய மயக்கத்தால் கட்டுரை நான்-லீனியராக ஆகிவிடக்கூடும். முடித்துவிடலாம். இந்த நேரத்தில் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் குடித்து பலியான 150-க்கும் மேற்பட்ட அந்த கூலித்தொழிலாளிகளின் நினைவு வந்து நெஞ்சை அறுக்கிறது. மதுபான பெருமுதலைகளின் கொள்ளை லாபத்துக்காக இங்கே அரசு, அடிமட்ட கூலிகளுக்கு நல்ல சாராயம் தருவதற்கான கதவை அடைக்கிறது. அவர்களை விஷச் சாராயத்தைத் தேடிப் போக வைக்கிறது. இதற்கு என்ன மாற்று. புரியவில்லை. குடிகாரன் அறிவுரை கூறுவதும் தவறு. வணக்கம்.