Friday, September 12, 2008

கொச்சு கள்ளி....(ஓணம் ஸ்பெஷல்)

எனக்கு நிறைய கேரள நண்பர்கள் உண்டு. நண்பிகளும். அவர்களிடம் இருந்து சேர நன்னாட்டின் பலவித பண்பாட்டு, கலாசார விஷயங்களை கேட்டறிந்து வியந்திருக்கிறேன்.
குட்டிப்புரம் என்ற கேரளத்தின் அழகிய சிற்றூரைச் சேர்ந்த, அம்புலி என்ற அற்புத பெயர் கொண்ட ஒரு பேரழகி சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஸ்நேகிதியாக இருந்தாள். இப்போது அது முறிந்துபோன உறவு. பல கேரள அரசியல் விகடங்களை அம்புலி என்னிடம் கூறியிருக்கிறாள். அதில் ஒன்றுதான் ஒரு எம்எல்ஏவை பற்றிய கலக்கலான கதைகள். அந்த எம்எல்ஏவின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. தவிரவும் கேரள அரசியலில் நான் வீக். இந்த எம்எல்ஏவின் (இப்போது மாஜியா என்பதும் தெரியாது) கோக்குமாக்குள் கேரளத்தில் பிரபலமாம். அதையட்டி பல இட்டுக்கட்டிய கதைகளும் சேர்த்து இந்த எம்எல்ஏ குறித்த ஜோக்குள் அங்கு படு பாப்புலர். மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் வகையை போல.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இது:

எம்எல்ஏ ஒரு முறை சட்டைவாங்க துணிக் கடைக்கு போயிருக்கிறார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்¢ஸ்கேர்ளாக இருந்தாள். சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் எம்எல்ஏக்கு தேவை. எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: 'கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?' உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாளாம்.

மலையாள மொழி தெரிந்திருந்தால் இந்த ஜோக்கின் தாத்பர்யம் சரியாக புரியும். கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம். வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள். அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான். அதன் இன்னொரு அர்த்தம், 'அடி கள்ளி உண்டாயிருக்கியா' என்பதை ஒத்திருந்ததால்தான் அந்த அறை கிடைத்ததாம்.

10 comments:

துளசி கோபால் said...

எந்தொரு கஷ்டப்பாடு:-)

Anonymous said...

கள்ளி என்றால் கள்ளனின் பெண்பால்(திருடி)கட்டமெல்லாம் இல்லை

SP.VR. SUBBIAH said...

நன்னாயிட்டு உண்டு நண்பரே!

பொய்யன் said...

நன்றி துளசி. தேஜாவுக்கு கள்ளி என்றால் கட்டம்தான் என்று உங்கள் மலையாள ஞானத்தைக் கொண்டு சொல்லிவிடுங்கள்.

பொய்யன் said...

ப்ரிய தேஜா. மலையாள புரொபசர் மாதிரி கான்பிடன்டோடு பேசும் உங்கள் கான்பிடன்டை வரவேற்கிறேன். ஆனால், கள்ளி என்பது கட்டம்தான். சேச்சிகளிடம் கேட்டு அறியவும். :)

பொய்யன் said...

தேங்ஸ் திரு. சுப்பையா. உங்கள் பெயர் எனக்கு எஸ்.வி. சுப்பையாவோடுதான் அடிக்கடி நினைவில் பதிகிறது. நன்றாக இருந்தது என்று கூறியதற்கு மீண்டும் நன்றி.

பரிசல்காரன் said...

அன்புள்ள பொய்யன்,

எனது பெயர் கிருஷ்ணகுமார். பரிசல்காரன் என்கிற பெயரில் வலைப்பூவில் எழுதி (உங்கள் பாஷையில் ராவடி பண்ணி) வருகிறேன். நான் போட்டிருந்த பதிவில் 9விஜய் டி.வியில்..) குறிப்பிட்டிருந்தவர்களெல்லாம் என்னைப் போன்ற வலைப்பதிவர்கள்தான்...

பரிசல்காரன் said...

ஹி..ஹி..

ஒண்ணுமில்ல, என்னோட பதிவுல வந்து நீங்கள்லாம் யாருங்கன்னு கேட்டிருந்தீங்கள்ல, பதில் சொல்லிப் பார்த்தென்.

ம்ஹும். சரியா வர்ல!

பொய்யன் said...

விளக்கத்துக்கு நன்றி பரிசல். எல்லாம் ஒரு குடும்பமாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதுசரி அந்த கேபிள் சங்கர் மேட்டர் என்னாச்சு. ஏதாச்சும் விளக்கம் சொன்னாரா?

பரிசல்காரன் said...

லேட் ரிப்ளை:-

ம்ஹூம்!