Thursday, May 15, 2008

நட்சத்திரப் பதிவர் த. அகிலன் கவனத்துக்கு.....

உங்கள் பதிவு படித்தேன். எஸ். எழில்வேந்தன் நேர்காணல் மிக சுவாரசியம். என் பால்ய காலம் இலங்கை வானொலி கேட்டே கழிந்தது. கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது, ராமதாஸ் (என்று நினைக்கிறேன்) ஆகியோரின் காந்தக் குரலில் அப்போதெல்லாம் கட்டுண்டு கிடப்பேன்.
கே.எஸ். ராஜா அளிக்கும் திரை விருந்து மிகப் பிரபலம். Ôவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே அமர்ந்திருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பு கழுமிய வணக்கங்கள்Õ என மின்னல்வேகத்தில் அவர் அறிவித்துச் செல்லும் பாங்கு, நம் உடலுக்குள் ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடியது.
திரைப்படத்தின் முன்னோட்டமாக கொடுக்கும் நிகழ்ச்சிதான் திரை விருந்து. அதில் பல Ôகிம்மிக்ஸ்Õ வேலைகளையும் ராஜா நிகழ்த்திக் காட்டியிருப்பார். ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த படம் Ôநீயா?Õ. அதில் ஸ்ரீப்ரியா ஒரு பாம்பு. அந்த பாம்பின் புருஷனும் ஒரு பாம்பு. அதன் பெயர் ராஜா. இந்த இரண்டு பாம்புகளும் கூடிக் குலவிக் கொண்டிருக்கிற நேரத்திலே, காட்டுக்குள் வரும் கமல் தலைமையிலான வெட்டிப் பயல்கள் கூட்டம், ஸ்ரீப்ரியாவின் புருஷன் பாம்பை சுட்டுக் கொன்று விட்டுப் போய்விடும். அப்போது ஸ்ரீப்ரியா தனது அழகிய குரலால், Ôராஜா...என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ என்று அலறுவார். நீயா பட திரை விருந்து கொடுக்கும்போது, நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ஸ்ரீப்ரியா அலறலை வெளியிடுவார்கள். Ôராஜா....என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ. உடனே கே.எஸ். ராஜா தனது கம்பீரத் தொண்டையில் இப்படிச் சொல்வார்: Ô....இல்லவே இல்லை...மீண்டும் சனிக்கிழமை இதே நேரத்தில் திரை விருந்தில் உங்களைச் சந்திக்கிறேன். இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுவது கே.எஸ். ராஜ்ஜா...Õ
இப்படிப்பட்ட ஆளுமையான கே.எஸ். ராஜா, கடைசியில் தமிழகம் வந்து தண்ணியடித்தே செத்துப் போனது சோகம்.
உச்சரிப்பு நேர்த்தியின் உச்ச நட்சத்திரம் பி.ஹெச். அப்துல் ஹமீது. அவரின் அதிரும் குரலில்நேர்த்தியற்ற ஒலிபெருக்கிகள் கூட கம்பீரம் பெற்றுவிடும். உதயாவின் பாட்டு¢க்குப் பாட்டு, அவரது ஹைலைட் நிகழ்ச்சி. Ôசுபததாச உள்ளரங்கிலே....Õ என்று அவர் சொல்வது இன்னும் கூட என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏழு கேள்விகள் என்றொரு நிகழ்ச்சியும் பிரபலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன அறிவிப்பாளர்கள் வழங்கும¢ என¢ விருப்பம் சுவையானது. ஒவ்வொரு அறிவிப்பாளரின் பாடல் ரசனையையும் அறிந்து கொள்ளலாம். அப்துல் ஹமீதுக்கு எப்போதும் சோகம் இழையோடும் மெலடிதான் பிடிக்கும். ஒருமுறை இப்படி அறிவித்தார். Ôபடத்தில் ஒரு குதிரை பாடுவது போல இந்த பாடல¢ வந்தாலும்...கண்டசாலாவின் குரலால் அழகுபெற்ற பாடல் இது...Õ என்று சொல்லி, Ôஎஜமான் பெற்ற செல்வமே...என் சின்ன எஜமானேÕ என்ற திராபை பாடலைப் போட்டார். நொந்து போனேன்.
தமிழகம் வந்து பல்வேறு நுண்ணரசியல்களால் பந்தாடப்பட்ட அவர், நிழல¢கள் ரவி அம்மன் முறுக்குக¢ கம்பிக்கு விளம்பரம் செய்கிற ரேஞ்சுக்கு, சி கிளாஸ் விளம்பர மாடலாக மாறிப் போய்விட்டார்.
இலங்கை வானொலியின் சாதனை ஒலிச்சித்திரம். முழுநீளத் திரைப்படத்தை அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்துக்குள் சுருக்கி, ஒலி வடிவில் அற்புதமாக கொடுத்து விடுவார்கள். எடிட்டிங் நேர்த்தி அவ்வளவு சிறப்பாக இருக்கும். வசனங்கள் நிறைந்த படங்கள் என்றால் வசதி. அருமையாகக் கொடுத்து விடலாம். பட்டிக்காடா பட்டணமா, விதி போன்ற படங்கள் இந்த ரகம். ஆனால், ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை வசனம¢ வரும் பாலுமகேந்திராவின் படத்துக்கே ஒலிச்சித்திரம் போட்டு அசத்தியவர்கள் இலங்கை வானொலிக்காரர்கள். பாலுமகேந்திராவின் படங்களில் காட்சிகளுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். அப்படிப்பட்ட Ôஅழியாத கோலங்கள்Õ என்னும் படத்தைக்கூட ஒலிச்சித்திரமாக்கி அசத்தியது ரேடியோ சிலோன். எப்படி? ஷோபா, தன் பாட்டுக்கு ஆற்றங்கரை ஓரமாக நடந்துகொண்டே, தூரமாய் போகும் மாணவர்களைப் பார்த்து கையசைக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பின்னணி இசை மெலிதாய் ஒலிக்க, திரைச்சித்திரம் வழங்கும் அறிவிப்பாளர் மெல்லியதாய் அதிரும் குரலில் சொல்வார். நதியோரமாக ஆசிரியை போய்க்கொண்டிருக்கிறார்.. எதிர்வரும் மாணவர்களை...என்ற ரீதியில் போகும். அடேயப்பா என்ன உத்தி என்று சின்ன வயசில் வியந்திருக்கிறேன்.
என் அப்பா சொல்வார். இலங்கை வானொலியில் முன்பு மயில்வாகனம் சர்வானந்தா என்றொரு அறிவிப்பாளர் இருந்தாராம். அவர் அவ்வளவு பிரபலம். அந்தக் காலத்தில் தங்கவேலு நடித்த Ôநான் கண்ட சொர்க்கம்Õ படத்தில் சொர்க்கத்துக்குப் போகும் தங்கவேல் தன் கையில் வைத்திருக்கும் ரேடியோவைத் திருப்பும்போது, Ôஉங்கள் அன்பு அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா...Õ என்று சொல்லுமாம். உடனே தங்கவேலு, Ôஅடப்பாவிகளா..இவனுக சொர்க்கத்துக்கு வந்தாலும் விடமாட்டானுகளா...Õ என்பாராம்.
தற்போதைய பண்பலை அறிவிப்பாளர்களின் உச்சரிப்பை பற்றித் தரம் தாழ்த்தி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது தேவையற்றது என்பது என் எண்ணம். இது வேகத்தின் காலம். ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் மயக்கும் குரல் கேட்டு நான் காதல்வயப்பட்டிருக்கிறேன். சூரியன் எப்.எம்.மின் பழைய கண்மணியின் குரலுக்கும் இப்போதைய டோசிலாவின் குரலுக்கும் மாபெரும் ரசிகன் நான். தியாகராஜ பாகவதர் காலத்து ஆட்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் காலம் பிடிக்காது. எம்.எஸ்.வி காலத்தவருக்கு இளையராஜா பிடிக்காது. இளையராஜா கோஷ்டிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்காது. என்னைப் பொருத்தவரை, Ôபொன் மகள் வந்தால்Õ டி.எம்.எஸ்.ஸ§ம் பிடிக்கிறது. அதன் ரீமிக்ஸ§ம் பிடிக்கிறது.சிறுபிராய நினைவுகளைக் கிளறியமைக்காக வெம்மை பொங்கும் இந்த நள்ளிரவிலே நன்றி சொல்லிக் கொள்கிறேன் அகிலன்.

4 comments:

Anonymous said...

http://www.geotamil.com/pathivukal/nizhalvu_vnmathiyazakan_books.htm

பொய்யன் said...

ithupondra arumaiyana chuttiyay tharuvatharku kooda annonyaga vara venduma annoniyare (ithai menakkettu tamili adichu poda nenacha athu thani pathiva mela poi ukkanthuduchu. sorry. blogil romba palaga vendi iruk

Vignesh said...

உறக்கம் வராத இரவுகளில் எப்.ம் அறிவிபாளர்கள் நீண்ட நாள் நண்பர்களைபோல தோன்றுவது உண்மை ...உங்கள் நடையை மிகவும் ரசித்தேன் ...
வாழ்த்துகள்

vignesh
https://amazwi.blogspot.com

பொய்யன் said...

nandri thiru vignesh avargale.

thanithirukkum iravukalai RJkkalin kuralkalai nanum natpai unarnthirukkiren vignesh. varukaikku meendum nandri