Monday, May 5, 2008

ஷோபாடேவின் புதிய புத்தகம் டர்...டர்..

பிரபல எழுத்தாளரான அறுபது வயது அழகி ஷோபாடே சமீபத்தில் எழுதிய புதிய புத்தகம் Ôசூப்பர்ஸ்டார் இண்டியா: ஃபிரம் இன்கிரடிபிள் டு அன்ஸ்டாப்பபிள்Õ. மும்பையில் சூப்பர் ஸ்டார் அமிதாப் வெளியிட்டார். இப் புத்தகத்துக்கான விமர்சனத்தை, சிறந்த பத்தி எழுத்தரான பாய்சந்த் படேல், சமீபத்திய Ôஅவுட்லுக்Õ இதழில் (மே 6 & 12) எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்பதை விட கிழித்திருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.Ôஇந்தியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் அட்டையில் எதற்காக ஆசிரியரின் புகைப்படத்தை போட வேண்டும். ஆசிரியர் ஷோபாடே என்னவோ அழகுதான். ஆனால் புத்தகத்தின் சாரத்தை அப்படிச் சொல்ல முடியவில்லை. படு சாதாரணம்Õ என்று துவக்கத்திலே பளீரடி கொடுத்திருக்கும் பாய்சந்த் படேல், ஷோபா டே ஏன் பெங்குவின் பதிப்பகத்தின் செல்லக் குழந்தையாக இருக்கிறார் என்பதை கொஞ்சம் வயிற்றெரிச்சலோடு சொல்கிறார். பெங்குவின் பதிப்பகத்தின் தங்க வாத்து ஷோபா டே என்பதற்கு ஒரு கதை வேறு சொல்கிறார். பெங்குவின் இந்தியா பதிப்பாளராக டேவிட் டேவிதார் இருந்த சமயம், ஷோபா டே&வின் புதிய நாவலுக்கான கையெழுத்துப் பிரதியைப் பார்த்து பதிப்பக ஊழியர் ஒருவர் சிரிசிரியென்று சிரித்துக்கொண்டிருந்தாராம். டேவிதார் அவரைக் கடுமையாகப் பார்த்து, ÔÔசிரிக்காதே. இந்த புத்தகம்தான் உன் சம்பளத்தைத் தந்து கொண்டிருக்கிறதுÕÕ என்றாராம். ஷோ&வுக்கு பெங்குவினில் உள்ள Ôகனத்தைÕ தெரிந்துகொள்ளுங்கள். இதன்பிறகும் பாய்சந்த் விமர்சனத்துக்கு வந்துவிடவில்லை. பெங்கு&ஷோபா நெருக்கத்தை பொறுமலோடு சொல்லித் தீர்க்கிறார். பெங்குவின் பதிப்பகம் தனது 20&ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை இந்தியாவில் நடத்தியபோது. ஷோபா டேவை மும்பையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார்கள். தாஜ் ஓட்டலில் தங்க வைத்தார்கள். நான் கூட (வேறுயார் பாய்சந்த் படேல்தான்) பெங்குவினுக்கு புத்தகம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். எனக்கெல்லாம் இப்படி சிறப்புச் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.சில பக்கங்களில் குறிப்பிட்ட சில வாக்கியங்களை கொட்டை எழுத்தில் போட்டுள்ளார்கள். எதற்கென்று தெரியவில்லை. ஆசிரியர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். ஒருக்கால் அந்த கொட்டை எழுத்துகளை மட்டும் படித்தால் போதும். 400&க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படித்து களைக்க வேண்டாம் என்ற சலுகையில் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது என்றும் படேல் கிண்டலடிக்கிறார்.நூலில் உள்ள இலக்கியத் தரமான ஒரு பகுதியை வெளியிடுகிறேன். வாசகர்களே நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றும் பகடி செய்கிறார்.எனக்கென்னவோ, இது உண்மையான விமர்சனமாகத் தெரியவில்லை. பழைய காண்டு தெரிகிறது. ஆனால், வினோத் மேத்தா போன்ற ஓர் ஆளுமையின் ஆசிரியத்துவத்தில் வரும் ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. புத்தகம் கிடைத்துப் படித்தவர்கள் சொல்லுங்கள்.

1 comment:

Anonymous said...

ava periya ivala?