Tuesday, May 20, 2008

பூங்கோதைக்கு பதில் கீதா ஜீவன்

நம்ம பையனை கொஞ்சம் லஞ்ச கேஸ்ல இருந்து கழட்டி விட்ற மாட்டீகளா என்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவிடம் போனில் பேசினார் சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. அது டேப் ஆகிவிட்டது. பாலிடிக்ஸ் சுனாமி சுப்பிரமணியசாமி அதை வெளியிட்டு கலங்கடித்தார். சட்டசபையில் மேட்டர் வந்தது. வேறு வழி இல்லாததால் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார் பூங்கோதை. அமைச்சர் பூங்கோதை செய்தது வெட்கக்கேடான செயல் என்று கூறிய கருணாநிதி, பூங்கோதையின் ராஜினாமா என் பரிசீலனையில் இருக்கிறது என்றார். இதைத் தொடர்ந்து கழுத்து, முதுகு வலிக்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், பூங்கோதை மேட்டர் என்னாச்சு என்று கேள்வி எழுப்ப, அதற்கு இன்று காலையே விடை கிடைத்துவிட்டது.
பூங்கோதை ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. அவரது சமூகநலத்துறை, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கீதாவின் கால்நடை, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.
கீதா ஜீவனுக்கு இது புரமோஷனா, டிபுரமோஷனா. சமூகம், கால்நடை இதில் எது சிறந்தது. லஞ்ச லாவண்யத்தில் திளைத்த பழைய அரசு அதிகாரி டிகால்டிகள் யாராவது பதில் சொல்லவும்.

No comments: