Monday, May 19, 2008

கோயிலில் ஜெயலலிதா டான்ஸ்

சுற்றுலாவுக்காக கோத்தகிரி போயிருப்பீர்கள். ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள சுண்டட்டி என்னும் சிற்றூரைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அங்குள்ள ஆலமலை ரங்கநாதர் கோயில் மிகப் பிரசித்தம். வினை தீர்க்கும் தலம் என்பார்கள். இந்தக் கோயிலுக்குத்தான் ஜெயலலிதா இன்று வந்தார்.
தோழி சசிகலாவுடன் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த மாதம் 8&ம் தேதியில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அங்கிருந்தே கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் ஏற்றும் அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இன்று பௌர்ணமி. அதோடு வைகாசி விசாகம். இந்த அருமையான நாளில் ஆலமலை ரங்கநாதலை தரிசிக்க தோழியோடு இன்று சுண்டட்டி வந்தார் ஜெயலலிதா. பகல் 12.40&க்கு கோயிலுக்குள் நுழைந்தனர். படுகர் இன மக்கள் பெரும்பான்மையான அளவில் உரிமை கொண்டாடும் கோயில் இது. ஜெயலலிதாவுக்கும் சசிக்கும் படுகர் பாரம்பரியத்தில் கோயில் மரியாதை அளிக்கப்பட்டது. ரங்கநாத சாமியை ஜெயலலிதா தரிசித்தார். மேடு, பள்ளமாக இருந்த இடங்களைக் கடந்து கோயிலுக்கு வந்ததால் களைப்பாக இருந்தார். இதனால் கோயில் வாசலில் இருந்த மேடையில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறினார்.
அந்த சமயத்தில் கோயில் முன்பு, வழிபாட்டு முறையின் ஓர் அங்கமாக தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடிக் கொண்டிருந்தனர் படுகர் இனப் பெண்கள். அவர்களின் நடனத்தை ஆவலுடன் பார்த்த ஜெயலலிதா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். ஒரு சில நிமிடம் மட்டுமே இந்த நடனம். பிறகு சிரித்தபடி விடைபெற்றுச் சென்றார்.

No comments: