Sunday, March 9, 2008

பாடகர் மிஷ்கின்

அஞ்சாதே படத்தின் பாடல்களைக் கேட்கிற சமயத்தில்தான் கவனித்தேன். டைரக்டர் மிஷ்கின் 2 பாடல்களைப் பாடியிருக்கிறார். கண்ணதாசன் காரைக்குடி மற்றும் தலைப்புப் பாடலான அச்சம் தவிர். ஒரு படத்தின் தீர்மான சக்தியாக இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எப்பா இசையமைப்பு நமக்கு ரெண்டு பாட்டப் போடு. நானும் பாட்றேன் என்று சொல்லிவிட்டால் வேறு வழியில்லை. கர்ணகடூரமாக எதையாவது பாடிவைத்தால் அதை கேட்டுத்தான் தொலைக்க வேண்டியிருக்கும். அந்த ரகமாகத்தான் இருக்கும் என நினைத்து கேட்க ஆரம்பித்து அசந்து விட்டேன். பிசிறில்லாத, ஸ்ருதி சுத்தமான மயக்கும் குரல். ஹாட்ஸ் ஆப் மிஷ்கின்.பாரதியாரின் அச்சம் தவிர் பாட்டைக் கேட்கும்போது ஏழாவது மனிதனில் அச்சமில்லை அச்சமில்லை என்ற எஸ்பிபியின் உணர்ச்சியூட்டும் பாடல் நினைவுக்கு வந்தது. அந்த பாடலை ரேடியோவில் கேட்கவே முடியாது. அதுபோல ஒரு புரட்சிகரத்தன்மையுடன் இருந்த மற்றொரு பாடல் ஊமை விழிகளில் வரும் தோல்வி நிலையென நினைத்தால்...இந்தப் பாடலுக்கு ஆல் இந்தியா ரேடியோ தடையே போட்டிருந்ததாகக் கேள்வி. எதற்கென்று இதுவரை தெரியவில்லை.

1 comment:

யாத்ரீகன் said...

the oomai vizhigal song is supposed to be a pro LTTE song .. if you can notice the song lyrics you can read between lines..

i've heard such a news.. not sure how far its true...