Saturday, March 8, 2008

15-ம் தேதிக்கு பிறகு பா.ம.க. என்ன செய்யும்?

ஒன்றும் செய்யாது. திமுக கூட்டணியில்தான் இருக்கும். அதற்குள் கொஞ்சம் உதார் விட்டுப் பார்க்கலாம். கிடைத்தால் லாபம் என்பது மட்டுமே பாமகவின் கணக்கு.
திமுக கூட்டணிக்கு பாமக கொடுத்துவரும் லேட்டஸ்ட் தலைவலி ராஜ்யசபா தேர்தல். தமிழ்நாட்டில் இருந்து 6 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (தேவைப்பட்டால்) 26ம் தேதி நடக்கிறது. வேட்புமனு கடைசி நாள் வரும் 15. ராமதாஸ் தனக்குத்தானே வைத்திருக்கிற கெடு நாள்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. திமுக கூட்டணி சார்பில் 4 எம்பிக்களையும் அதிமுக கூட்டணி சார்பில் ஒரு எம்பியையும் ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம். ஒரு எம்.பி. பதவிக்குத்தான் போட்டி இருக்கிறது. அது மார்க்சிஸ்டுக்குத்தான் என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஊஹ§ம் எங்களுக்குத்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது பாமக. Ôதிமுகவுக்கு இரண்டு இடம் எதுக்கு? எங்களுக்கு ஒண்ணு கொடுங்கÕ என்கிறார்கள்.
Ôஅன்புமணிதான் இருக்கிறாரே. அவரோட பதவிக்காலம் முடிய இன்னும் வருஷங்கள் கிடக்கே. அப்புறம் எதுக்கு இன்னொரு எம்பிக்கும் அலைகிறீர்கள்Õ என்கிறது திமுக.
பாமகவுக்கு சீட் கிடைக்கவே கிடைக்காது என்று இன்னொரு முறையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் கருணாநிதி. ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை 2004ல் பாமகவுக்கு கொடுத்தாயிற்று. 2006ல் இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுத்தாயிற்று. இப்போது காங்கிரசுக்கு 2 இடமும் மார்க்சிஸ்டுக்கு ஒரு இடமும் கொடுப்பதுதான் நியாயம். பாமக இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த வரிசைக்கிரமத்தில் அடுத்தது பாமகவுக்குத்தான் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அடுத்த வாய்ப்பு என்பது 2010ல். நாங்கள் என்ன கேனயர்களா என்கிறது பாமக தரப்பு. கருணாநிதி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிவிட்டாரே என்றால். 15ம் தேதி வரை டயம் இருக்குல்ல. நடக்கிறத பாருங்க என்கிறார் ராமதாஸ் பிரயோஜனமில்லை. கதவு மூடியாகிவிட்டது. சம்பந்தி கிருஷ்ணசாமியை காங்கிரஸ் நிறுத்திவிட்டால் ராமதாஸ் வாய்திறக்க மாட்டார் என்று ஒரு திட்டம் இருக்கிறது. டில்லியில் சோனியா தூதர் அன்புமணியிடம் பிரஷர் கொடுக்கிறார்.
எனவே-
15ம் தேதிக்கு பிறகு ஒன்றும் நடக்காது. அன்புமணியின் நலன் கருதி அதிமுகவுக்கும் போகமாட்டார்கள். ஏதாவது போராட்டத்தைப் பண்ணிக்கொண்டே திமுக கூட்டணியில் இருக்கும் பாமக. இதுதான் நடக்கப்போகிறது. இது நடக்காவிட்டால் நான் வலைப்பதிவில் இருந்து விலகிக் கொள்கிறேன். சேலஞ்ச்.

No comments: