Sunday, March 9, 2008

காஷ்மீர் சிங் உளவாளியா, கடத்தல்காரனா....

35 வருஷம் பாகிஸ்தான் சிறைகளில் இரும்புக் குண்டுகளைப் பிணைத்துக் கிடந்தபோதுகூட காஷ்மீர் சிங் இந்த அளவு வருந்தியிருக்க மாட்டார் என்று தெரிகிறது. முஷாரப்பின் கருணையால் விடுதலையாகி இப்போது இந்தியா வந்திருக்கிறார். சொந்த ஊரான பஞ்சாப் போய் சும்மா இருக்க வேண்டியதுதானே. பேட்டி கொடுத்தார். இந்தியாவுக்காக உளவு பாத்தேன். மரண தண்டனை விதிக்கப்பட்டு, 35 வருஷம் ஜெயில்ல கஷ்டப்பட்டு அங்க இருக்கிற மனித உரிமை மந்திரி முயற்சியால எப்படியோ தண்டனையில இருந்து தப்பிச்சு வந்துட்டேன். ஆனா, இந்தியா எனக்காக என்ன பண்ணுச்சு. என்ன விடுதலை பண்றதுக்கு மாத்தி, மாத்தி வந்த எந்த மத்திய அரசும் முயற்சியே எடுக்கல. என் வீட்டைக்கூட கவனிக்கல. என் பொண்டாட்டி பத்து, பாத்திரம் தேச்சு பொழைக்க வேண்டி வந்தது என்று உருக்கமாக பேட்டி அளித்தார். பத்திரிகைகள் இதை பெருஸ§ பெருஸா போட்டது. பாகிஸ்தான் பத்திரிகையும்தான்.இதில்தான் வினை ஆரம்பித்தது. காஷ்மீர் சிங் விடுதலையாக ரொம்ப பாடுபட்டவர் அங்கு இருக்கும் மனித உரிமைகள¢ அமைச்சர் அன்சார் பா¢னே. காஷ்மீர் சிங்கின் பேட்டியைப் பாத்து அவர் கொதித்துப் போய்விட்டார். ÔÔஅப்பாவின்னு சொன்னதாலதானே அந்த ஆள் விடுதலைக்கு பாடுபட்டேன். இப்போ உளவாளின்னு அந்த ஆளே சொல்றாரே. அடப்பாவிÕÕ என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் அன்சார். இது தெரிந்ததும் காஷ்மீர் சிங் பயந்துவிட்டார். எங்கே திரும்பவும் ராவல்பிண்டிக்கு கூட்டிட்டுப் போய் ஜெயில்ல தள்ளிருவானோன்னு நினைச்சுட்டார். ஐயாங்களா நான் உளவாளி இல்லை. கடத்தல் பண்ணத்தான் போனேன். இந்த பத்திரிகைக்காரப் பயலுவ ஏதேதோ எளுதிப்புட்டானுக. என்ன வுட்ருங்கோ என்று இப்போ கதறுகிறார். சிறையில் முஸ்லீமாக மதம் மாறினேன் என்றும் இல்லை, இல்லை மதம் மாறவில்லை. உளவு பார்க்கிறதுக்காக நடிச்சேன் என்றும் மாறி, மாறி கூறுகிறார்.தேசத்துக்காக பாடுபட்டால் இப்படித்தான் ஆகுமா. தேசியம் என்பது பெருங்கதையாடல், தேசப்பற்று என்பது பேப்பெருங்கதையாடல் என்று பொளந்துகட்டிக் கொண்டிருக்கும் போஸ்ட்மாடர்னீய பதிவர்கள் இதுபற்ற¤ ஏதாவது சொல்லுங்களேன்.

No comments: