Wednesday, May 28, 2008
பிரமிள், அசோகமித்திரன் மற்றும் சாவி
கவி மேதை பிரமிளுக்கு குறும்பும் அங்கதமும் கிண்டலும் அதிகமாம். உண்மையான அக்கறை கொண்ட புதிய, இளைய வாசகர் என்றால் இறங்கிவந்து பேசுவார். அதேநேரத்தில் அரைகுறைகள் தங்களை மேதையாகக் கருதி ஏதாவது உளறிவைத்தால் கிழித்து தொங்கவிட்டுவிடுவார். கிண்டல் என்றே தெரியாத வகையில் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவாராம்.
ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு கடையில் அசோகமித்திரன் படம் போட்ட ஒரு புத்தகமோ, பத்திரிகையோ இருந்ததாம். அதை உற்றுப் பார்த்த பிரமிள், நண்பரிடம் இப்படிச் சொன்னாராம்.
"அசோகமித்திரன் போலவும் இருக்கிறார். அழகாகவும் இருக்கிறார்"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தினமணிகதிரில் அசோகமித்திரனின் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. கதை வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தினமணிகதிர் ஆசிரியர் குழுவில் மாற்றம். சாவி ஆசிரியர் ஆகி விட்டார். சுத்த இலக்கியப் பிரதிகள் என்றால் சாவிக்கு எட்டிக்காய். சீக்கிரம் தொடரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டார். உதவி ஆசிரியர் ஒருவர், தயங்கி தயங்கி விஷயத்தை அசோகமித்திரனிடம் சொன்னார். அசோகமித்திரனுக்கு கோபம். ஆனால் தன்மையாகத்தானே காட்டுவார். எதுக்கு சீக்கிரம். இந்த வாரத்தோடேயே நிறுத்திடறேன் என்று சொல்லி, முற்றும் போட்டுவிட்டாராம்.
அந்த வாரக் கதை இப்படி முடிந்தது.
அவன கதவை இழுத்துச் சார்த்தி பூட்டு போட முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் பூட்ட முடியவில்லை. பூட்டு என்னவோ சரியாகத்தான் இருந்தது. சாவி தான் சரியில்லை.
---&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேண்டுமானால் சொல்லுங்கள். அவ்வப்போது ஒரு பதிவாகப் போட்டு விடுகிறேன்.
Saturday, May 24, 2008
இன்ஜினியரிங் படிச்சு வீணாப் போற பய புள்ளைகளுக்காக
ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் அளிக்கப்பட்டு, 26ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு கவுன்சலிங், ஜூலை 3ம் தேதியும், தொழிற்கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கவுன்சலிங் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் நடக்கிறது. 9ம் தேதி வெளிமாநில மாணவர்களுக்கும், 10ம் தேதி ஊனமுற்றோருக்கும் கவுன்சலிங் நடக்கும்.
பொதுப்பிரிவு பாடத் திட்டத்துக்கான கவுன்சலிங், ஜூலை 11ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
இனி மெடிக்கல்காரவுகளுக்கு...
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு ஜூன் 1ல் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் 3ம் தேதி முதல் 17ம் தேதி வரை வழங்கப்படும். ரேண்டம் எண் 16ல் வெளியிடப்பட்டு, 28ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
முதல்கட்ட கவுன்ச-லிங் ஜூலை 4ம் தேதி தொடங்கி 11ல் முடிகிறது. முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் ஜூலை 21.
ஆகஸ்ட் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இரண்டாவது கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 25ல் தொடங்கி 28ல் முடிகிறது. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,645. இதில் 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீடு ஆகும். முஸ்லிம்களுக்கு 49 இடங்களும், கிறிஸ்தவர்களுக்கு 49 இடங்களும் ஒதுக்கப்படும்.
Friday, May 23, 2008
லட்சுமிராய் கழுத்தில் காமக்கடி
Tuesday, May 20, 2008
பூங்கோதைக்கு பதில் கீதா ஜீவன்
பூங்கோதை ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. அவரது சமூகநலத்துறை, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கீதாவின் கால்நடை, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.
கீதா ஜீவனுக்கு இது புரமோஷனா, டிபுரமோஷனா. சமூகம், கால்நடை இதில் எது சிறந்தது. லஞ்ச லாவண்யத்தில் திளைத்த பழைய அரசு அதிகாரி டிகால்டிகள் யாராவது பதில் சொல்லவும்.
Monday, May 19, 2008
கோயிலில் ஜெயலலிதா டான்ஸ்
தோழி சசிகலாவுடன் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த மாதம் 8&ம் தேதியில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அங்கிருந்தே கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் ஏற்றும் அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இன்று பௌர்ணமி. அதோடு வைகாசி விசாகம். இந்த அருமையான நாளில் ஆலமலை ரங்கநாதலை தரிசிக்க தோழியோடு இன்று சுண்டட்டி வந்தார் ஜெயலலிதா. பகல் 12.40&க்கு கோயிலுக்குள் நுழைந்தனர். படுகர் இன மக்கள் பெரும்பான்மையான அளவில் உரிமை கொண்டாடும் கோயில் இது. ஜெயலலிதாவுக்கும் சசிக்கும் படுகர் பாரம்பரியத்தில் கோயில் மரியாதை அளிக்கப்பட்டது. ரங்கநாத சாமியை ஜெயலலிதா தரிசித்தார். மேடு, பள்ளமாக இருந்த இடங்களைக் கடந்து கோயிலுக்கு வந்ததால் களைப்பாக இருந்தார். இதனால் கோயில் வாசலில் இருந்த மேடையில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறினார்.
அந்த சமயத்தில் கோயில் முன்பு, வழிபாட்டு முறையின் ஓர் அங்கமாக தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடிக் கொண்டிருந்தனர் படுகர் இனப் பெண்கள். அவர்களின் நடனத்தை ஆவலுடன் பார்த்த ஜெயலலிதா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். ஒரு சில நிமிடம் மட்டுமே இந்த நடனம். பிறகு சிரித்தபடி விடைபெற்றுச் சென்றார்.
Sunday, May 18, 2008
விஜய் டெண்டுல்கர் மரணம்
வீரியம் கொண்டு நாடக ஆக்கங்களைக் கொடுத்தவர். நாட்டின் முதன்மையான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயர் பெற்றிருந்தார். சினிமாவிலும் தன் முத்திரையைக் காண்பித்தவர். Ôஅர்த் சத்யாÕ ஒரு எடுத்துக்காட்டு.
பத்மபூஷண், சங்கீத நாடக அகடமி மற்றும் தேசிய அளவில் சினிமா விருதுகளும் பெற்றவர்.
அவர் ஆத்மா சாந்தியடைவதாக
Saturday, May 17, 2008
லெஸ்பியன் - மே 17 - ஒரு பயங்கர ஒற்றுமை
MAY 17 is International Day Against Homophobia marking the day in 1990 that the WHO removed homosexulaity from its list of mental illnesses.
மே 17
சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயந்திமலர் (35). ருக்மணி (33). சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். இருவருக்கும் திருமணம் ஆன பின்பும் நெருக்கமாக இருந்தனர். இவர்கள் நெருக்கம் பற்றி தவறாகப் பேசப்பட்டது. அதைப் பற்றி இப் பெண்கள் கவலைகொள்ளவில்லை. இரு பெண்களின் கணவர்களுக்கும் இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. ஒரு வாரத்துக்கு முன் ருக்மணி, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு ஜெயந்திமலர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் ருக்மணியை அழைத்துவர அவரது அக்கா வந்தார். ஆனால் ஜெயந்திமலரை விட்டு வரவே மாட்டேன் என்று ருக்மணி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் ருக்மணியின் அக்கா விடவில்லை. கணவன் வீட்டுக்குச் சென்று குடும்பம் நடத்தாமல் இப்படி கூத்தடிக்கிறாயே என்று சண்டை போட்டார். காலையில் வராவிட்டால் நடப்பதே வேறு என்று எச்சரித்துச் சென்றார். உறவினர்கள் நம்மைப் பிரித்து விடுவார்களோ என்று ஜெயந்திமலரும் ருக்மணியும் கலங்கினர். பிறகு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி, இருவரும் தீக்குளித்தனர். கரிக்கட்டைகளாகத்தான் இன்று அவர்களை மீட்க முடிந்தது.
----மே 17 மாலைப் பத்திரிகை செய்தி
Thursday, May 15, 2008
கருணாநிதி ஆஸ்பத்திரியில் அட்மிட்
அன்பழகனின் அறிக்கை:
கடந்த சில நாட்களாக கடுமையான கழுத்து வலி மற்-றும் முதுகு வலி-யி-னால் முதல்வர் கருணாநிதி பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். மருத்துவ-ம-னை-யில் சில நாட்-க-ளே-னும் தங்-கி-யி-ருந்து உரிய சிகிச்-சை-யைப் பெற வேண்-டும் என்று மருத்-துவ நிபு-ணர்-கள் வலி-யு-றுத்தி இருந்-த-னர். இதன் கார-ண-மாக போரூர் ராமச்-சந்-திரா மருத்-து-வ-ம-னை-யில் கரு-ணா-நிதி இன்று அனு-ம-திக்-கப்-பட்-டுள்-ளார். எனவே, சிகிச்சை நிறை-வ-டைந்து திரும்-பும் வரை அவரை யாரும் தொந்-த-ரவு செய்-திட வேண்-டாம் என்-றும் அவர் நலம் பெற முழு ஒத்-து-ழைப்பு நல்-கிட வேண்-டும் என்-றும் அனை-வ-ரை-யும் வற்-பு-றுத்-திக் கேட்-டுக் கொள்-கி-றேன். அன்-ப-ழ-கன் அறிக்கை இதுதான். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல்களும் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கி சிகிச்சை பெறும் நிலையில் தனது பொறுப்புகளை அவர் ஸ்டாலினுக்கு கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
தானியக் குதிருக்குள்ளே முளைவிடும் பிரியம்இன்றிரவு
கடைசிச் சந்திப்பில்
-----இந்தக் கோப்பைகள் வழிய/நமக்குத் தேவை/இன்னும் ஒரு துளிக் கசப்பு/
எதேச்சையாக/அறையை ஒழுங்கமைப்பது போல/உன் பழைய பொருட்களைத்/திருப்பிக் கொடுக்கிறேன்/
வேறெதையோ/பேசிக்கொண்டு/கவனிக்காதது போல/அவற்றைப் பெற்றுக்கொள்கிறாய்/
அவை வந்து சேர்ந்த வழிமுறைகள்/மறந்துவிட்டன/
நீ அருந்த விரும்பாத பானம்/ஏற்கனவே பாதி விஷமாகிவிட்டது/
இதுதான் கடைசிச் சந்திப்பென்று/யாரும் சொல்லிக்கொள்வதில்லை/
போகும்போது/இனி விழிக்கக்கூடாதென நினைத்த முகங்களையும்/ஒரு முறை/திரும்பிப் பார்க்கத்தான் தோன்றுகிறது
-----------------தன் வழியே
தானியக் குதிருக்குள்ளே/ஒரு பிரியம்/மெல்ல முளை கட்டுகிறது/
அதற்கு/வெளிச்சமில்லை/காற்று இல்லை/பற்றிக்கொள்ள/ஒரு பிடி நிலமில்லை/தனது ஈரத்தை தவிர/அதற்கு ஒன்றுமேயில்லை/
ஆனால¢/பிடிவாதமாக/அது வெளியேறிக்கொண்டிருக்கிறது
நட்சத்திரப் பதிவர் த. அகிலன் கவனத்துக்கு.....
கே.எஸ். ராஜா அளிக்கும் திரை விருந்து மிகப் பிரபலம். Ôவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே அமர்ந்திருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பு கழுமிய வணக்கங்கள்Õ என மின்னல்வேகத்தில் அவர் அறிவித்துச் செல்லும் பாங்கு, நம் உடலுக்குள் ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடியது.
திரைப்படத்தின் முன்னோட்டமாக கொடுக்கும் நிகழ்ச்சிதான் திரை விருந்து. அதில் பல Ôகிம்மிக்ஸ்Õ வேலைகளையும் ராஜா நிகழ்த்திக் காட்டியிருப்பார். ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த படம் Ôநீயா?Õ. அதில் ஸ்ரீப்ரியா ஒரு பாம்பு. அந்த பாம்பின் புருஷனும் ஒரு பாம்பு. அதன் பெயர் ராஜா. இந்த இரண்டு பாம்புகளும் கூடிக் குலவிக் கொண்டிருக்கிற நேரத்திலே, காட்டுக்குள் வரும் கமல் தலைமையிலான வெட்டிப் பயல்கள் கூட்டம், ஸ்ரீப்ரியாவின் புருஷன் பாம்பை சுட்டுக் கொன்று விட்டுப் போய்விடும். அப்போது ஸ்ரீப்ரியா தனது அழகிய குரலால், Ôராஜா...என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ என்று அலறுவார். நீயா பட திரை விருந்து கொடுக்கும்போது, நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ஸ்ரீப்ரியா அலறலை வெளியிடுவார்கள். Ôராஜா....என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ. உடனே கே.எஸ். ராஜா தனது கம்பீரத் தொண்டையில் இப்படிச் சொல்வார்: Ô....இல்லவே இல்லை...மீண்டும் சனிக்கிழமை இதே நேரத்தில் திரை விருந்தில் உங்களைச் சந்திக்கிறேன். இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுவது கே.எஸ். ராஜ்ஜா...Õ
இப்படிப்பட்ட ஆளுமையான கே.எஸ். ராஜா, கடைசியில் தமிழகம் வந்து தண்ணியடித்தே செத்துப் போனது சோகம்.
உச்சரிப்பு நேர்த்தியின் உச்ச நட்சத்திரம் பி.ஹெச். அப்துல் ஹமீது. அவரின் அதிரும் குரலில்நேர்த்தியற்ற ஒலிபெருக்கிகள் கூட கம்பீரம் பெற்றுவிடும். உதயாவின் பாட்டு¢க்குப் பாட்டு, அவரது ஹைலைட் நிகழ்ச்சி. Ôசுபததாச உள்ளரங்கிலே....Õ என்று அவர் சொல்வது இன்னும் கூட என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏழு கேள்விகள் என்றொரு நிகழ்ச்சியும் பிரபலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன அறிவிப்பாளர்கள் வழங்கும¢ என¢ விருப்பம் சுவையானது. ஒவ்வொரு அறிவிப்பாளரின் பாடல் ரசனையையும் அறிந்து கொள்ளலாம். அப்துல் ஹமீதுக்கு எப்போதும் சோகம் இழையோடும் மெலடிதான் பிடிக்கும். ஒருமுறை இப்படி அறிவித்தார். Ôபடத்தில் ஒரு குதிரை பாடுவது போல இந்த பாடல¢ வந்தாலும்...கண்டசாலாவின் குரலால் அழகுபெற்ற பாடல் இது...Õ என்று சொல்லி, Ôஎஜமான் பெற்ற செல்வமே...என் சின்ன எஜமானேÕ என்ற திராபை பாடலைப் போட்டார். நொந்து போனேன்.
தமிழகம் வந்து பல்வேறு நுண்ணரசியல்களால் பந்தாடப்பட்ட அவர், நிழல¢கள் ரவி அம்மன் முறுக்குக¢ கம்பிக்கு விளம்பரம் செய்கிற ரேஞ்சுக்கு, சி கிளாஸ் விளம்பர மாடலாக மாறிப் போய்விட்டார்.
இலங்கை வானொலியின் சாதனை ஒலிச்சித்திரம். முழுநீளத் திரைப்படத்தை அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்துக்குள் சுருக்கி, ஒலி வடிவில் அற்புதமாக கொடுத்து விடுவார்கள். எடிட்டிங் நேர்த்தி அவ்வளவு சிறப்பாக இருக்கும். வசனங்கள் நிறைந்த படங்கள் என்றால் வசதி. அருமையாகக் கொடுத்து விடலாம். பட்டிக்காடா பட்டணமா, விதி போன்ற படங்கள் இந்த ரகம். ஆனால், ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை வசனம¢ வரும் பாலுமகேந்திராவின் படத்துக்கே ஒலிச்சித்திரம் போட்டு அசத்தியவர்கள் இலங்கை வானொலிக்காரர்கள். பாலுமகேந்திராவின் படங்களில் காட்சிகளுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். அப்படிப்பட்ட Ôஅழியாத கோலங்கள்Õ என்னும் படத்தைக்கூட ஒலிச்சித்திரமாக்கி அசத்தியது ரேடியோ சிலோன். எப்படி? ஷோபா, தன் பாட்டுக்கு ஆற்றங்கரை ஓரமாக நடந்துகொண்டே, தூரமாய் போகும் மாணவர்களைப் பார்த்து கையசைக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பின்னணி இசை மெலிதாய் ஒலிக்க, திரைச்சித்திரம் வழங்கும் அறிவிப்பாளர் மெல்லியதாய் அதிரும் குரலில் சொல்வார். நதியோரமாக ஆசிரியை போய்க்கொண்டிருக்கிறார்.. எதிர்வரும் மாணவர்களை...என்ற ரீதியில் போகும். அடேயப்பா என்ன உத்தி என்று சின்ன வயசில் வியந்திருக்கிறேன்.
என் அப்பா சொல்வார். இலங்கை வானொலியில் முன்பு மயில்வாகனம் சர்வானந்தா என்றொரு அறிவிப்பாளர் இருந்தாராம். அவர் அவ்வளவு பிரபலம். அந்தக் காலத்தில் தங்கவேலு நடித்த Ôநான் கண்ட சொர்க்கம்Õ படத்தில் சொர்க்கத்துக்குப் போகும் தங்கவேல் தன் கையில் வைத்திருக்கும் ரேடியோவைத் திருப்பும்போது, Ôஉங்கள் அன்பு அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா...Õ என்று சொல்லுமாம். உடனே தங்கவேலு, Ôஅடப்பாவிகளா..இவனுக சொர்க்கத்துக்கு வந்தாலும் விடமாட்டானுகளா...Õ என்பாராம்.
தற்போதைய பண்பலை அறிவிப்பாளர்களின் உச்சரிப்பை பற்றித் தரம் தாழ்த்தி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது தேவையற்றது என்பது என் எண்ணம். இது வேகத்தின் காலம். ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் மயக்கும் குரல் கேட்டு நான் காதல்வயப்பட்டிருக்கிறேன். சூரியன் எப்.எம்.மின் பழைய கண்மணியின் குரலுக்கும் இப்போதைய டோசிலாவின் குரலுக்கும் மாபெரும் ரசிகன் நான். தியாகராஜ பாகவதர் காலத்து ஆட்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் காலம் பிடிக்காது. எம்.எஸ்.வி காலத்தவருக்கு இளையராஜா பிடிக்காது. இளையராஜா கோஷ்டிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்காது. என்னைப் பொருத்தவரை, Ôபொன் மகள் வந்தால்Õ டி.எம்.எஸ்.ஸ§ம் பிடிக்கிறது. அதன் ரீமிக்ஸ§ம் பிடிக்கிறது.சிறுபிராய நினைவுகளைக் கிளறியமைக்காக வெம்மை பொங்கும் இந்த நள்ளிரவிலே நன்றி சொல்லிக் கொள்கிறேன் அகிலன்.
உடலேதுமின்றி பெருகுகிறது ஒரு ஸ்பரிசம்
அந்தக் கவிதை:
மின் தடை - : சில பதிவுகள
1
இவ்வளவு நேரமும்எங்கிருந்ததுஇவ்வளவு இருள்என்று கேட்கிறாள்குழந்தை
இருள்நம் சொற்களில் நிறைகிறதுநம் கோப்பைகளில் வழிகிறதுநம் கட்டிலில் படுத்துக்கொள்கிறதுநம் கிணற்றினை நிரப்புகிறதுநம் கண்ணீரில் கரிக்கிறதுநம் பிசாசுகளை எழுப்புகிறது
இருளைத் தொடும் குழந்தைஅஞ்சுகிறாள்
குழந்தைகளைப் பழக்க வேண்டும்இருளுக்கு
2
எத்தனையோ முறைஸ்பரிசித்த உடல்திசை தேடும்இருளில்தடுமாறித் தீண்டிய வேளைபெருகுகிறதுஉடலேதுமின்றிஒரு ஸ்பரிசம்
3
மெழுகுவர்த்திகள்தீக்குச்சிகள்டார்ச்சுகள்அவசர விளக்குகள்
சற்றே சுடர் தேடிநீளும் கைகளிடையேஒரு கை நீளக்கண்டேன்மலைகள் தாண்டிசூரியக் கதிரொன்று தேடி
4
இடத்தை அடைப்பதற்கென்றேகொண்டுவந்தோம்இந்தஉடலைமனதைதளவாடங்களை
நகரவொருஇடமற்ற வேளைஇருள் எடுத்துக்கொள்கிறதுஎல்லாவற்றையும்
எஞ்சுகிறோம்வீடுமற்ற வெளியுமற்றஓரிடத்தில்
தினகரன் பத்தி எவன்டா எழுதுனது...
சேவியர் என்பவர் பதிவிலும் இருக்கு. தெய்வமகன் என்பவர்
பதிவிலும் இருக்கு. அது யார் எழுதிய கட்டுரை. வலைப்பதிவு உலகுக்கு புதியவனான
எனக்கு, ஞானிகள் யாராவது இருந்தால் இதுபற்றி விளக்கவும்
Monday, May 5, 2008
ஷோபாடேவின் புதிய புத்தகம் டர்...டர்..
பிரபல எழுத்தாளரான அறுபது வயது அழகி ஷோபாடே சமீபத்தில் எழுதிய புதிய புத்தகம் Ôசூப்பர்ஸ்டார் இண்டியா: ஃபிரம் இன்கிரடிபிள் டு அன்ஸ்டாப்பபிள்Õ. மும்பையில் சூப்பர் ஸ்டார் அமிதாப் வெளியிட்டார். இப் புத்தகத்துக்கான விமர்சனத்தை, சிறந்த பத்தி எழுத்தரான பாய்சந்த் படேல், சமீபத்திய Ôஅவுட்லுக்Õ இதழில் (மே 6 & 12) எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்பதை விட கிழித்திருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.Ôஇந்தியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் அட்டையில் எதற்காக ஆசிரியரின் புகைப்படத்தை போட வேண்டும். ஆசிரியர் ஷோபாடே என்னவோ அழகுதான். ஆனால் புத்தகத்தின் சாரத்தை அப்படிச் சொல்ல முடியவில்லை. படு சாதாரணம்Õ என்று துவக்கத்திலே பளீரடி கொடுத்திருக்கும் பாய்சந்த் படேல், ஷோபா டே ஏன் பெங்குவின் பதிப்பகத்தின் செல்லக் குழந்தையாக இருக்கிறார் என்பதை கொஞ்சம் வயிற்றெரிச்சலோடு சொல்கிறார். பெங்குவின் பதிப்பகத்தின் தங்க வாத்து ஷோபா டே என்பதற்கு ஒரு கதை வேறு சொல்கிறார். பெங்குவின் இந்தியா பதிப்பாளராக டேவிட் டேவிதார் இருந்த சமயம், ஷோபா டே&வின் புதிய நாவலுக்கான கையெழுத்துப் பிரதியைப் பார்த்து பதிப்பக ஊழியர் ஒருவர் சிரிசிரியென்று சிரித்துக்கொண்டிருந்தாராம். டேவிதார் அவரைக் கடுமையாகப் பார்த்து, ÔÔசிரிக்காதே. இந்த புத்தகம்தான் உன் சம்பளத்தைத் தந்து கொண்டிருக்கிறதுÕÕ என்றாராம். ஷோ&வுக்கு பெங்குவினில் உள்ள Ôகனத்தைÕ தெரிந்துகொள்ளுங்கள். இதன்பிறகும் பாய்சந்த் விமர்சனத்துக்கு வந்துவிடவில்லை. பெங்கு&ஷோபா நெருக்கத்தை பொறுமலோடு சொல்லித் தீர்க்கிறார். பெங்குவின் பதிப்பகம் தனது 20&ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை இந்தியாவில் நடத்தியபோது. ஷோபா டேவை மும்பையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார்கள். தாஜ் ஓட்டலில் தங்க வைத்தார்கள். நான் கூட (வேறுயார் பாய்சந்த் படேல்தான்) பெங்குவினுக்கு புத்தகம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். எனக்கெல்லாம் இப்படி சிறப்புச் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.சில பக்கங்களில் குறிப்பிட்ட சில வாக்கியங்களை கொட்டை எழுத்தில் போட்டுள்ளார்கள். எதற்கென்று தெரியவில்லை. ஆசிரியர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். ஒருக்கால் அந்த கொட்டை எழுத்துகளை மட்டும் படித்தால் போதும். 400&க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படித்து களைக்க வேண்டாம் என்ற சலுகையில் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது என்றும் படேல் கிண்டலடிக்கிறார்.நூலில் உள்ள இலக்கியத் தரமான ஒரு பகுதியை வெளியிடுகிறேன். வாசகர்களே நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றும் பகடி செய்கிறார்.எனக்கென்னவோ, இது உண்மையான விமர்சனமாகத் தெரியவில்லை. பழைய காண்டு தெரிகிறது. ஆனால், வினோத் மேத்தா போன்ற ஓர் ஆளுமையின் ஆசிரியத்துவத்தில் வரும் ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. புத்தகம் கிடைத்துப் படித்தவர்கள் சொல்லுங்கள்.