நான் நிறைய பதிவிட்டிருக்கிறேன். ஆச்சர்யம். துயரும் நெகிழ்வும் கூடிய இரவாக இருக்கிறது. என் ஆரம்பப் பதிவில் சொன்ன மனுஷ்யபுத்திரனின் நீராலானது என் மேசையின் இடப்புற ஓரம் இன்னும் வீற்றிருக்கிறது. அதனுள் உறைந்து உறங்கிக் கொண்டிருக்கும் பல கவிதைகளை பார்வை ஓட்டித் தீண்டி நீடித்திருக்க முடியவில்லை. நெகிழ்வு மொக்கை உருக்கி உடைத்து விடக் கூடிய வார்த்தைகள். இதை எனக்கு எப்போதோ கொடுத்துச் சென்ற தோழியின் கரங்களின் வெம்மையை இந்தக் கணத்திலே உணருகிறேன். கொதிக்கும் நீராலானது நூலில் இருந்து இதோ சில கவிதைகள். இனி நான் தூங்கப் போகிறேன்.
கடைசிச் சந்திப்பில்
-----இந்தக் கோப்பைகள் வழிய/நமக்குத் தேவை/இன்னும் ஒரு துளிக் கசப்பு/
எதேச்சையாக/அறையை ஒழுங்கமைப்பது போல/உன் பழைய பொருட்களைத்/திருப்பிக் கொடுக்கிறேன்/
வேறெதையோ/பேசிக்கொண்டு/கவனிக்காதது போல/அவற்றைப் பெற்றுக்கொள்கிறாய்/
அவை வந்து சேர்ந்த வழிமுறைகள்/மறந்துவிட்டன/
நீ அருந்த விரும்பாத பானம்/ஏற்கனவே பாதி விஷமாகிவிட்டது/
இதுதான் கடைசிச் சந்திப்பென்று/யாரும் சொல்லிக்கொள்வதில்லை/
போகும்போது/இனி விழிக்கக்கூடாதென நினைத்த முகங்களையும்/ஒரு முறை/திரும்பிப் பார்க்கத்தான் தோன்றுகிறது
-----------------தன் வழியே
தானியக் குதிருக்குள்ளே/ஒரு பிரியம்/மெல்ல முளை கட்டுகிறது/
அதற்கு/வெளிச்சமில்லை/காற்று இல்லை/பற்றிக்கொள்ள/ஒரு பிடி நிலமில்லை/தனது ஈரத்தை தவிர/அதற்கு ஒன்றுமேயில்லை/
ஆனால¢/பிடிவாதமாக/அது வெளியேறிக்கொண்டிருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Indru iravu thalaippil vanthirukka koodathu. matterin muthal vaarthai. athavath :Indriravu nan niraya pathivitirukkiren: ena vara vendum. thookkkama vardu. athan
Post a Comment