என் நட்பு வட்டம் பெரிது. ஆனால் அவர்களுடன் அடிக்கடி அளவளாவி இன்புற்றிருக்கத்தான் இப்போதெல்லாம் முடிவதில்லை. நேரம், காலம் இல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டிய என் பணிச்சூழல் இதற்கு காரணம். நெடுநாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிறு நண்பர்களோடு இணைய சந்தர்ப்பம் கிடைத்தது. நீலாங்கரைக்குப் பக்கம் சவுக்குத்தோப்பில் அழுந்திய நண்பனின் பண்ணை வீடு. நீச்சல்குளம். மது. ஸ்பானிய பாணி அவித்த மீனின் விள்ளல் என களைகட்டியது. நண்பர் கூட்டத்தில் ஒரு இலக்கிய டிகால்டியும் இருந்தது. எங்கள் வயதுக் குழுவைக் கடந்த மூத்த தலைமுறை ஆளை டிகால்டி என்று செல்லப் பெயர் சொல்லி அழைப்போம். இலக்கியர் என்பதால் படைப்பாளி என்றெல்லாம் அவசரப்பட்டு தீர்மானித்து விடாதீர்கள். நல்ல வாசகர் (என்று சொல்லிக் கொள்வார்). அவரைத் தவிர்த்து அந்தக் கூட்டத்தில் எனக்குத்தான் சொற்ப இலக்கிய அறிவு என்பதால் அடிக்கடி பலிகடா ஆவதும் நான்தான். பெண்நட்புகள், பல்நாட்டு உணவுகள், பங்குச்சந்தை, நிலம், கிரிக்கெட், மெட்டல் ராக் இசை, சுற்றுப்பயணம், ஸ்காண்டிநேவியன் நாடுகள் ஆகியவைதான் எங்கள் விவாதத்தில் பொதுவில் வரும் விஷயங்கள். அதனால் இலக்கியருக்கு தன் மேதமையைப் பறைசாற்ற சந்தர்ப்பமே வராது. கடைசியில் சிக்குவது நான்தான். இம்முறையும். மித போதை, நீலநிற நீச்சல்குள நீரின் குளிர்மைக்கு இடையே இலக்கியர் இட்ட சவரக் கத்தி விஷயங்களில் என்னை ஈர்த்த சிலவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.
கவி மேதை பிரமிளுக்கு குறும்பும் அங்கதமும் கிண்டலும் அதிகமாம். உண்மையான அக்கறை கொண்ட புதிய, இளைய வாசகர் என்றால் இறங்கிவந்து பேசுவார். அதேநேரத்தில் அரைகுறைகள் தங்களை மேதையாகக் கருதி ஏதாவது உளறிவைத்தால் கிழித்து தொங்கவிட்டுவிடுவார். கிண்டல் என்றே தெரியாத வகையில் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவாராம்.
ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு கடையில் அசோகமித்திரன் படம் போட்ட ஒரு புத்தகமோ, பத்திரிகையோ இருந்ததாம். அதை உற்றுப் பார்த்த பிரமிள், நண்பரிடம் இப்படிச் சொன்னாராம்.
"அசோகமித்திரன் போலவும் இருக்கிறார். அழகாகவும் இருக்கிறார்"
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தினமணிகதிரில் அசோகமித்திரனின் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. கதை வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தினமணிகதிர் ஆசிரியர் குழுவில் மாற்றம். சாவி ஆசிரியர் ஆகி விட்டார். சுத்த இலக்கியப் பிரதிகள் என்றால் சாவிக்கு எட்டிக்காய். சீக்கிரம் தொடரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டார். உதவி ஆசிரியர் ஒருவர், தயங்கி தயங்கி விஷயத்தை அசோகமித்திரனிடம் சொன்னார். அசோகமித்திரனுக்கு கோபம். ஆனால் தன்மையாகத்தானே காட்டுவார். எதுக்கு சீக்கிரம். இந்த வாரத்தோடேயே நிறுத்திடறேன் என்று சொல்லி, முற்றும் போட்டுவிட்டாராம்.
அந்த வாரக் கதை இப்படி முடிந்தது.
அவன கதவை இழுத்துச் சார்த்தி பூட்டு போட முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் பூட்ட முடியவில்லை. பூட்டு என்னவோ சரியாகத்தான் இருந்தது. சாவி தான் சரியில்லை.
---&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேண்டுமானால் சொல்லுங்கள். அவ்வப்போது ஒரு பதிவாகப் போட்டு விடுகிறேன்.
Wednesday, May 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இத்தனை சுவாரஸ்யமான விஷயங்களை 'வேண்டுமானால்தான்' தருவீர்களா. அள்ளி விடுங்கள். ப்ளீஸ்.
நன்றி சிறில் அலெக்ஸ் அவர்களே. என்னை ஈர்த்த விஷயங்களை எல்லாம் தருகிறேன்.
amam appu...alli vidunga...super a keethu....
:-))))) .. good one..
poi ilayaey ;-)
dear my yaathreekan, nan solvathellam......................
Engava ashokamitrana pathi ippdi kevalappaduthra maathri eluthurele nalla iruppele....
visalam maami
athu nan sollala. pramil sonnathu. kochukkathel
//அவன கதவை இழுத்துச் சார்த்தி பூட்டு போட முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் பூட்ட முடியவில்லை. பூட்டு என்னவோ சரியாகத்தான் இருந்தது. சாவி தான் சரியில்லை.
//
அபாரம்..! உங்கள் பெயரையும் மிதமான போதையையும் பார்க்கும்போது சந்தேகமாயுள்ளது. இதுவும் பொய்யா..?
//அதை உற்றுப் பார்த்த பிரமிள், நண்பரிடம் இப்படிச் சொன்னாராம்.
"அசோகமித்திரன் போலவும் இருக்கிறார். அழகாகவும் இருக்கிறார்"
//
:)) பிரமிள் படைப்புகள் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசித்ததில்லை. அவரது ஆழமான நடை எனது அவசர வாசிப்பு தருணங்களுக்கு ஏற்றதாயிருக்கவில்லை. அவர் இலங்கையில் வன இலாகாவில் பணிபுரிந்தார் என நினைக்கிறேன்.
அவரைப்பற்றி மேலும் சில தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கின்றன.
http://www.keetru.com/literature/essays/taj_8.php
http://www.sundararamaswamy.com/Ninaivodai_Pramizh.htm
குறிப்பு :- என்னையும் வைற்லேபிள் சாப்பிட அழைத்ததற்கு நன்றி. உங்களுக்கு போதையில் இப்படியான அழகான பதிவுகள் வரும்.. ஆனால் எனக்கு...!! :))
ப்ரிய கோகுலன்
1. நான் சொல்வதெல்லாம்......
2. பிரமிள் கவிதைகளின் முழுத்தொகுப்பை காலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். மீறல் இதழ் தொகுப்பும் அவரிடம் இருக்கும். பிரமிளின் அதிரடிக் கவிதைகள் உள்பட அவரது பல¢துறை ஆளுமைகளை வெளிப்படுத்திய இதழ் அது.
3. ந¦ங்கள் போதையற்ற வேளையிலும் பதிவில் பின்னுகிறீர்கள். வெரைட்டியாக தருகிறீர்கள். லங்கா சாராயமும் உள்ளே போனால் சொல்லத் தேவையில்லை.
Post a Comment