Thursday, May 15, 2008

உடலேதுமின்றி பெருகுகிறது ஒரு ஸ்பரிசம்

நான¢ வடசென்னைவாசி. ஆற்காடு வீராசாமியைப் பார்த்தால் உதைக்க வேண்டும் என்று எல¢லா வடசென்னைக்காரர்களும் நினைப்பார்கள். தினம் இரவானால் மின்தடை. பகலெல்லாம் கோடை வெப்பம். இரவெல்லாம் புழுக்கம் என்று மனதும் உடலும் வெந்து கிடக்கிறது. இதோ இதை எழுதுவதற்கு சிறிது முன்னர்தான் மின் தடை நீங்கி, வெளிச்சம் மினுங்கியது. விசிறி சுழன்றது. விசிறுவதற்காக நாளிதழுக்கு அடியில் இருந்த கவிதைத் தொகுப்பை எடுத்தேன். எனக்கு இலக்கியப் பரிச்சயம் சுத்தமாய் இல்லை. கவிதையை நேசிக்கும் தோழி கொடுத்தது (இப்போது கை மாறி விட்டது). மனுஷ்ய புத்திரன் என்பவரது நீராலானது என்ற கவித் தொகுப்பு. எதேச்சையாய் உள்ளே புரட்டியபோது மின்தடை பற்றிய கவிதை. அசந்துவிட்டேன். இருட்டைப் பற்றி என்னைப் போன்ற ஆட்கள் நினைப்பதற்கும் இந்த கவிஞர்கள் நினைப்பதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்.
அந்தக் கவிதை:
மின் தடை - : சில பதிவுகள
1
இவ்வளவு நேரமும்எங்கிருந்ததுஇவ்வளவு இருள்என்று கேட்கிறாள்குழந்தை
இருள்நம் சொற்களில் நிறைகிறதுநம் கோப்பைகளில் வழிகிறதுநம் கட்டிலில் படுத்துக்கொள்கிறதுநம் கிணற்றினை நிரப்புகிறதுநம் கண்ணீரில் கரிக்கிறதுநம் பிசாசுகளை எழுப்புகிறது
இருளைத் தொடும் குழந்தைஅஞ்சுகிறாள்
குழந்தைகளைப் பழக்க வேண்டும்இருளுக்கு
2
எத்தனையோ முறைஸ்பரிசித்த உடல்திசை தேடும்இருளில்தடுமாறித் தீண்டிய வேளைபெருகுகிறதுஉடலேதுமின்றிஒரு ஸ்பரிசம்
3
மெழுகுவர்த்திகள்தீக்குச்சிகள்டார்ச்சுகள்அவசர விளக்குகள்
சற்றே சுடர் தேடிநீளும் கைகளிடையேஒரு கை நீளக்கண்டேன்மலைகள் தாண்டிசூரியக் கதிரொன்று தேடி
4
இடத்தை அடைப்பதற்கென்றேகொண்டுவந்தோம்இந்தஉடலைமனதைதளவாடங்களை
நகரவொருஇடமற்ற வேளைஇருள் எடுத்துக்கொள்கிறதுஎல்லாவற்றையும்
எஞ்சுகிறோம்வீடுமற்ற வெளியுமற்றஓரிடத்தில்

4 comments:

பொய்யன் said...

அய்யய்யோ...அந்த புஸ்தகத்துல இருக்குற மாதிரியே பிரிச்சு..பிரிச்சு தான் கவிதைய அடிச்சேன். பதிவு போட்ட பின்னால பாக்கும்போது எல்லாம் சேந்துசேந்து கிடக்கும். என்ன பண்றது? அட்ஜஸ் பண்ணி படிக்க முடியுதா பாருங்க. எனக்கே கஷ்டமா இருக்கு. ப்ளீஸ். (நாம அடிச்ச மாதிரியே வர்றதுக்கு என்னங்க பண்ணனும். சொல்லித் தரவே மாட்டீங்கிறேங்களேப்பா...)

பொய்யன் said...

sernthu sernthu KIDAKKUM enbathai KIDAKKIRATHU ena padikkavum

தமிழ்நதி said...

பார்த்தேன் பொய்யன்(இதென்ன பெயர்) அழைக்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது. எனக்கும் கணனி பற்றிப் பெரிதாக அறிவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன் பதிலாக எனது வலைப்பூவில்.

பொய்யன் said...

நன்றி தமிழ்நதி. பொய்யன் என்று விளிப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என கவிதாயினியான தாங்களே சொல்வது வியப்பளிக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், சோனியா, புத்ததேவ் பட்டாச்சார்யா, அத்வானி என்றெல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு சங்கடமாகவா இருக்கிறது. பொய்யால்தான் வையகம் புனையப்பட்டிருக்கிறது. பொய்யால் பலர் ஆறுதலும் தேறுதலும் அடைகின்றனர். பொய் வாழவைக்கிறது. பொய் அழகானது. பொய் கவித்துவமானது. பொய் சாஸ்வதமானது. பொய் நெகிழ்வும் நேசமும் கொண்டது.