போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை முதல்வர் கருணாநிதி அட்மிட் செய்யப்பட்டார். காலையில் இருந்தே இதுதொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து நிதியமைச்சர் அன்பழகன் ஓர் அறிக்கை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அன்பழகனின் அறிக்கை:
கடந்த சில நாட்களாக கடுமையான கழுத்து வலி மற்-றும் முதுகு வலி-யி-னால் முதல்வர் கருணாநிதி பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். மருத்துவ-ம-னை-யில் சில நாட்-க-ளே-னும் தங்-கி-யி-ருந்து உரிய சிகிச்-சை-யைப் பெற வேண்-டும் என்று மருத்-துவ நிபு-ணர்-கள் வலி-யு-றுத்தி இருந்-த-னர். இதன் கார-ண-மாக போரூர் ராமச்-சந்-திரா மருத்-து-வ-ம-னை-யில் கரு-ணா-நிதி இன்று அனு-ம-திக்-கப்-பட்-டுள்-ளார். எனவே, சிகிச்சை நிறை-வ-டைந்து திரும்-பும் வரை அவரை யாரும் தொந்-த-ரவு செய்-திட வேண்-டாம் என்-றும் அவர் நலம் பெற முழு ஒத்-து-ழைப்பு நல்-கிட வேண்-டும் என்-றும் அனை-வ-ரை-யும் வற்-பு-றுத்-திக் கேட்-டுக் கொள்-கி-றேன். அன்-ப-ழ-கன் அறிக்கை இதுதான். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல்களும் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கி சிகிச்சை பெறும் நிலையில் தனது பொறுப்புகளை அவர் ஸ்டாலினுக்கு கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
Thursday, May 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment