Tuesday, October 14, 2008

கனிமொழி ராஜினாமா

என் பிரெண்ட் போன் பண்ணான். கனிமொழி ராஜினாமா பண்ணியாச்சாம்.

விஷயம் என்னன்னு தெரிய எனக்குத் தெரிஞ்ச தலைமைச் செயலகத்துல இருக்கும் செயலாளர் ஒருவர கேட்டேன் (ஜிம்கானா கிளப் பார்ட்டி). அவர் சொன்னது.


மார்க்சிஸ்ட் கம்யூ வரதராஜன், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் இன்று காலை சந்தித்தார். இதற்கு பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்விட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சர்வ கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் இது பொருந்துமா? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
பேட்டி முடிந்ததும் கனிமொழி கருணாநிதியை சந்தித்து, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்ப-டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி கடிதம் கொடுத்தாராம். அதை கருணாநிதி கையில் வைத்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை கருணாநிதிகிட்ட ஏன் கொடுக்கணும்? குழப்பமா இருக்குப்பா.

3 comments:

We The People said...

என்னங்க விவதெரியாதவரா இருக்கீங்க! தப்பி தவறி ஜனாதிபதி கையில போச்சுன்னா அப்புறம் ராஜினாமா கடிதத்தை ஏத்துக்குவாரே, எங்க கொடுத்த அவர் கைக்கு போகாதோ அங்க தானே கொடுக்க முடியும் ;)

ஐயோ! ஐயோ!!! இன்னுமா நாடு இதுங்களை நம்பிகிட்டு இருக்கு!!

Darren said...

இரண்டு வார கெடு கொடுக்கப்பட்டுருக்கிறது. பின் தேதியிட்ட ராசினாமா கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
//
ஐயோ! ஐயோ!!! இன்னுமா நாடு இதுங்களை நம்பிகிட்டு இருக்கு!!//

பூணூலை உள்ளே தள்ளுங்கோ அம்பி

Anonymous said...

//
பூணூலை உள்ளே தள்ளுங்கோ அம்பி
//
this is the problem with you people. if some one points out some of your falacies, you question the integrity of the person questioning! how many years you guys are going to get away with this! (You do not have to look in to my shirt for poonal. i wear one)