Monday, September 15, 2008

இந்திய பதிவர்களிடம் ஒரு கேள்வி

அரசவை கவிஞர் போல அந்தஸ்து கொண்ட சிலர் ஒன்று குழுமி, ஒரு மாநில முதல்வரை சுமார் ரெண்டே முக்கால் மணி நேரம், நீ இந்திரன், நீ சந்திரன், உன்னிடம் இருக்கே பவர் அதுதான் பவர், அதை யாராச்சும் கட் பண்ண முடியுமா..நீ எந்திரிச்சா, தமிழ்த்தாய் எந்திரிச்சா மாதிரி...நீ எழுதுகோல் எடுத்தா தொல்காப்பியன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுவான் .... என்கிற ரீதியில், கேட்கிற ஆளே வெட்கித் தலைகுனிகிற அளவுக்கு கவியரங்கம் என்ற பெயரில் புகழ்ந்து பாடுவார்களா? அதையும் ஆனந்தமாக ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வாரா? பொது நிகழ்ச்சியாக இது ஊடகங்களில் காட்டப்படுமா?
இந்தியா முழுமையில் இருந்தும் எழுதும் பதிவர்களிடம் இதை சீரியசாகவே கேட்கிறேன். எந்த மாநிலத்திலாவது இந்த மாதிரி ஒரு வடிவம் இருக்கிறதா?

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சர்வவல்லமை பொருந்திய மாயாவதி இருக்கிறார். அவருக்கு இப்படி ஜால்ரா கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? மராட்டியத்திலே பைப் புகைத்துக்கொண்டு பந்தாவாக பால் தாக்கரே என்று ஒரு தலைவர் இருக்கிறார். அவரை புல்லரிக்க வைக்கிற மாதிரி கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?
தயவுசெய்து சொல்லுங்கள்.

11 comments:

ஜோ/Joe said...

//முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?//

ஆமா! இவுகளுக்கெல்லாம் கவிதை வாசிச்சிடாலும் ..ரொம்ப புரிஞ்சிடும் .

Anonymous said...

பொய்யரே...நீங்கள் யார் அணி...அம்மா அணியா?கேப்டன் அணியா? சன் அணியா?

வேணும்னா சொல்லுங்க நாம கவியரங்கம் நடத்தலாம்...

அண்டர்வேர் ஆறுமுகம்

பொய்யன் said...

யாரையும் குறைத்து எடை போடாதீர்கள் ஜோ. நவ பிஹாரிய கவிதைகளில் வன்முறையின் தாக்கங்கள் என்ற தலைப்பில் பிரபல பிகார் இலக்கிய சஞ்சிகையான Ôஸாகித்யா சம்மானில்Õ நிதீஷ் குமார் ஒரு தொடர் கட்டுரை எழுதி வருகிறார். ரஜபுதன இளவேனில் காலம் என்ற ஒரு கவித் தொகுப்பை வசுந்தரா வெளியிட்டுள்ளார். முலாயம், முன்னணி ஹிந்தி கவிஞர் குல்மகாதி பெக்காரோவின் ரசிகர். சந்திரபாபு நாயுடுவையும் லாலுவையும் பற்றித்தான் தெரியவில்லை.

சிக்கிமுக்கி said...

முதல் பாகியில் (paragraph) கேட்டதெல்லாம் சரி.

இரண்டாம் பாகியைப் படித்துவிட்டு மற்றவர்களும் தம் பொய்ப்புகழ் கேட்க
ஏற்பாடு செய்து கொள்ளப் போகிறார்கள்!

தாங்காது !

Anonymous said...

பிகாரிய தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு, கோவாலு நான் கறக்கிறேன்டா பசும்பாலு என்ற பொருள்தரும் டைட்டில் பாடலை லாலு எழுதியிருக்கிறார். மன தேசலு சிரஞ்சீவிலு ஒடிச்சிலு என்ற ராயலசீமா வட்டார வழக்கு கவிதை ஒன்றை சமீபத்தி¢ல் சந்திரபாபு நாயுடு எழுதியுள்ளதாக ஆந்திரஜோதி பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதிவர் என்கிற முறையில் இதை தங்களுக்கு தெரியப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பொய்யன் said...

Anbulla underwear

En Ani Thani Ani

பொய்யன் said...

priya chikkimukki,

pavam avarkalumthan polachu pokattume

பொய்யன் said...

priya chikkimukki,

pavam avarkalumthan polachu pokattume

பொய்யன் said...

Dear Anony

chandrababu and lalu's poetic skills are new to me. thanks for ur valuble information.

Arizona penn said...

நீங்கள் சொன்ன மாயாவதி, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங், லாலு எல்லாரும் கவியரங்கம் வைத்து மற்றவர்கள் பாராட்டும் வரை காத்திருப்பது இல்லை...அவர்களாகவே தங்களை தாங்களே பாராட்டி விளம்பரம் கொடுத்து கொள்கின்றனர்....வட இந்திய சஞ்சிகைகளை பார்த்ததில்லையா நீங்கள்???

அதுமட்டுமில்லை, முலாயம் சிங், லாலு ஆகியோரை எதோ மூன்றாம் தர அரசியல்வாதிகளை போல் சொல்கிறீர்கள்...அவர்கள் தங்கள் மாநிலத்தை ஆளும்போது பல கோமாளித்தனங்கள் செய்தாலும், மத்தியில் மந்திரிகளாக பதவியேற்ற போது மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்,செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள்...முலாயம் சிங் நம் நாடு கண்ட மிக சிறந்த ராணுவ அமைச்சராக செயல்பட்டிருக்கிறார், லாலு பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை...நமது ரயில்வே இப்போது லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதே சாட்சி.....

தலைவி பேசும் தேர்தல் பிரசார மேடையில் ஒரே நாற்காலி மட்டுமே போடப்படும், மிகவும் வயதான அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் கூட முதலமைச்சர் மற்றும் அவரது தோழியின் காலில் சட்ட சபையிலேயே விழும் காட்சி வேறு எந்த மாநிலத்திலும் நிகழ்ந்திருக்காது !!!! ஒரு மூத்த தலைவரை புகழும் காட்சி உலகெங்கும் காணும் காட்சி தான்.....

பொய்யன் said...

//முலாயம் சிங், லாலு ஆகியோரை ஏதோ மூன்றாம் தர அரசியல்வாதிகளைப் போல சொல்கிறீர்கள்//

ஹலோ செல்வில்கி, நான் எப்போது அப்படிச் சொன்னேன். பதிவை சரியாக படியுங்கள். கருணாநிதி போல வல்லமை பொருந்திய ஆட்களாக இருக்கும் பிரபல அரசியலர்களை சொல்லி, அவர்களுக்கும் இதுபோல் கவியரங்கக் கூத்து நடத்திருக்கிறதா என்றுதான் கேட்கிறேன். உடனே தேவகவுடாவை சுட்டி அவர் வல்லமை ஆளா என கேட்கக்கூடாது.

//தலைவி பேசுமே தேர்தல் பிரசார மேடையில் ஒரே நாற்காலி மட்டுமே போடப்படும். மிகவும் வயதான...//

நாற்காலி போடப்பட்டாலும் அங்கே எந்த நாய்களும் உட்கார்ந்துவிடாது. சுயமரியாதை, கவுரவும் ஆகியவை எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் கூட்டம் அது. வெளிநாடு போய் வந்த நரசிம்மராவ் காலில் டெல்லி விமானநிலையத்தில் வைத்து, சீதாராம் கேசரி நெடுஞ்சாண் கிடையாக விழுந்த மாபெரும் புகைப்படம், வினோத்மேத்தா ஆசிரியத்துவத்தில் பயனியர் இருந்தபோது வந்தது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள். மன்னர் கால மகாத்மியத்துடன் இதுபோன்ற கவியரங்க கேலிக்கூத்து வேறு மாநிலத்தில் எங்காவது இருக்கிறதா என தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் கேட்டிருக்கிறேன். கட்சிக்காரன் கண்ணோட்டத்துடன் பேசாதீர்கள்.