Showing posts with label doubt. Show all posts
Showing posts with label doubt. Show all posts

Monday, September 15, 2008

இந்திய பதிவர்களிடம் ஒரு கேள்வி

அரசவை கவிஞர் போல அந்தஸ்து கொண்ட சிலர் ஒன்று குழுமி, ஒரு மாநில முதல்வரை சுமார் ரெண்டே முக்கால் மணி நேரம், நீ இந்திரன், நீ சந்திரன், உன்னிடம் இருக்கே பவர் அதுதான் பவர், அதை யாராச்சும் கட் பண்ண முடியுமா..நீ எந்திரிச்சா, தமிழ்த்தாய் எந்திரிச்சா மாதிரி...நீ எழுதுகோல் எடுத்தா தொல்காப்பியன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுவான் .... என்கிற ரீதியில், கேட்கிற ஆளே வெட்கித் தலைகுனிகிற அளவுக்கு கவியரங்கம் என்ற பெயரில் புகழ்ந்து பாடுவார்களா? அதையும் ஆனந்தமாக ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வாரா? பொது நிகழ்ச்சியாக இது ஊடகங்களில் காட்டப்படுமா?
இந்தியா முழுமையில் இருந்தும் எழுதும் பதிவர்களிடம் இதை சீரியசாகவே கேட்கிறேன். எந்த மாநிலத்திலாவது இந்த மாதிரி ஒரு வடிவம் இருக்கிறதா?

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சர்வவல்லமை பொருந்திய மாயாவதி இருக்கிறார். அவருக்கு இப்படி ஜால்ரா கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? மராட்டியத்திலே பைப் புகைத்துக்கொண்டு பந்தாவாக பால் தாக்கரே என்று ஒரு தலைவர் இருக்கிறார். அவரை புல்லரிக்க வைக்கிற மாதிரி கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?
தயவுசெய்து சொல்லுங்கள்.