சின்னம்மா: எஸ்.ஏ.பி.
மணிமேகலை பிரசுரம், சென்னை-17, 1992.
"அறிஞரும் கவிஞருமான ஞானக்கூத்தன் அணிந்துரை அளித்தது நான் பெற்ற பேறு..." எஸ்.ஏ.பி.
ஞானக்கூத்தனின் 'அணிந்துரை'யிலிருந்து:
..............தொடர்கதையாக வெளிவந்த காலத்தில் ஏராளமானவர்கள் படித்து மகிழ்ந்த நாவல்தான் திரு. எஸ்.ஏ.பி.யின் சின்னம்மா....முத்தையா என்ற செல்வர் திடீரென்று இறந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற குடும்பத்தில் ஏற்பட்டவற்றை பதற்றமற்ற நடையில் சொல்கிறார் ஆசிரியர்.....13 வயதான மெய்யப்பன்தான் கதையில் முந்தித் தெரியும் பாத்திரமாக படைக்கப் பெற்றிருக்கிறான். கதையின் அரங்கில் முக்கியமாக வரும் இந்தப் பாத்திரத்தின் பின்னே அதன் சின்னம்மாவாக வரும் நளினி என்ற பாத்திரம் கிளைகளினால் மறைக்கப்பட்ட பழம் போல அமைந்திருக்கிறது. மெய்யப்பனின் பாத்திரத்தை ஆசிரியர் அக்கறையுடன் உருவாக்கியிருக்கிறார். மிகக் குறைந்த அளவே எழுதி பாத்திரங்களையும் நிலைமைகளையும் வாசகர் மனதில் உருவாகும் வகையில் அமைந்துள்ளது திரு. எஸ்.ஏ.பி.யின் எழுத்து. கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு, நடை முதலானவற்றில் துலாக்கோல் பிடித்திருக்கிறார் திரு. எஸ்.ஏ.பி.
------
நா. முத்துக்குமார் அப்பா மாதிரிதான் என் அப்பாவும். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருக்கிறார். எல்லா தமிழ் மாத, வார, இலக்கிய. அ- இலக்கிய பத்திரிகைகளின் முதல் இதழ் தொடங்கி அதன் மொத்தத் தொகுப்பு பைண்டு வால்யூம்களும் நூலகத்தில் உள்ளன. இன்னும்கூட அழகாகப் பராமரிக்கிறார். எனக்குத்தான் இதையெல்லாம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. இன்று மாலை எதேச்சையாக ஒரு வால்யூமை எடுத்தேன். லயம். காலசுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்டு பிரமிளின் எழுத்துகளை அதிகம் போடுவதற்காகவே நடத்தப்பட்ட இதழ். அதன் 14-வது இதழில் ஒரு பக்கத்தில் (பக்க நம்பரே கிடையாது) மேற்கண்ட சின்னம்மா நூலில் உள்ள அணிந்துரையை பிரசுரித்திருக்கிறார்கள். வேறு எந்த கமெண்டும் அதில் இல்லை. ஞானக்கூத்தனை கடுமையாக விமர்சித்தவர் பிரமிள். எஸ்.ஏ.பி.யை ஐஸ் வைப்பதற்காக இப்படி ஒரு வழிசல் விமர்சனத்தை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ.பி.யும் அவர் அணிந்துரை கொடுத்ததற்காக எப்படி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் பாருங்கள் என்று காட்டுவதற்காகவே இதை லயம் பிரசுரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பாடா...பதிவின் தலைப்பு ஜஸ்டிபை ஆகிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment