Friday, September 26, 2008

போடா...போய் சிக்கன் கொண்டா... (விஜய்காந்த் டமாஸ்)

என் சினிமா நண்பன் சொன்ன கதை இது. விஜய்காந்த்துக்கு திருமணம் ஆகாத நேரம். அவரது ஆபீசில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார். ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். விஜய்காந்த், இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆர். சுந்தர்ராஜனை கவனிக்காமல் சென்றுவிட்டான். சுந்தர்ராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த ஆர். சுந்தர்ராஜன் கோபத்துடன் இப்படிச் சொன்னாராம்:

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"

Thursday, September 25, 2008

ரொம்ப நன்றி சாரு அவர்களே

திடீரென பீட்ஜெட்டில் சாரு ஆன்லைன் வழியாக பலர் என் பிளாக் பக்கம் வருவதை பார்த்து அரண்டுவிட்டேன். அவரது ஆன்லைன் போய் பார்த்தபோதுதான் தெரிந்தது. என் பிளாக் பிடித்திருந்தது என்று கூறி பல பதிவுகளை எடுத்துப்போட்டு பாராட்டி இருந்தார் சாரு. என் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது (உண்மையிலேயே). ரொம்ப நன்றி சாரு அவர்களே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களோடு நாளும் அல்லாடும் என் பணிக்கு இடையே இப்படி ஒரு வலைப்பதிவை ஜாலியாக தொடங்கி ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தேன். பெரும் எழுத்தாளர் ஒருவருக்கே அது பிடித்துப் போனது என் பேறு. ஆனால் சந்தடிசாக்கில் சக பதிவர்களை கிண்டலடிப்பதே இவன் வேலை என்பது போல ஒரு தொனி அதில் இருப்பதாக தெரிகிறது. பதிவுலகத் தோழர்களே அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் ச்சும்மா லுல்லாட்டி. எனவே வழக்கம்போல் இரண்டு, மூன்று பின்னூட்டங்களுடன் உங்கள் ஆதரவை எனக்கு நல்கிக் கொண்டிருக்கவும். சாருவுக்கு மறுபடி என் உளப்பூர்வ நன்றி.

Monday, September 22, 2008

டோண்டு ராகவனிடம் 2 கேள்விகள்

வலையுலகின் புதியவனான எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லப்போனால் கவனிக்கக்கூட மறந்துவிட்டேன். ஆம். நான் ஐம்பது பதிவுகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன். இது 54வது பதிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. முதல் பதிவு என்ற ஒற்றை வரியோடு என் முதல் பதிவை எழுதினேன். அது பல அர்த்த விரிவுகளுக்கு இட்டுச் சென்றதாக பல நண்பர்கள் கூறினர். இந்த ஐம்பது பதிவு கால இடைவெளியிலே எவ்வளவோ நிகழ்வுகள். திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு செய்திருக்கிறோமோ என்று என்னையே வியந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

என் பதிவுகளிலேயே எனக்குப் பிடித்த பதிவு என்று சுட்டிக் காட்டச் சொன்னால் இரு பதிவுகளை குறிப்பிடுவேன். ஒருமுறை தமிழ்மணம் திறந்து பலர் பதிவுகளைப் படித்தே நள்ளிரவு ஆகிவிட்டது. மிக தூக்கமாக வந்தது. எனவே தூக்கம் வருகிறது தூங்க போகிறேன் என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு ஒரு அனானி குட்நைட் என்று பின்னூட்டம் இட்டார். அந்த அன்பில் உண்மையிலே கரைந்து போனேன். மற்றொரு அன்பர் விதேச பாஷையில் பின்னூட்டி நலம் விசாரித்தார். ஒரு பிளாக்கராக இருப்பதன் விழுமியத்தை நான் அறிந்த தருணம் அது. மற்றொரு பதிவு ரிமைண்டர். பொதுவாக ஒரு நாளில் நான் செய்ய உத்தேசித்துள்ள வேலைகளை எனது மொபைல் போனில் குறித்து வைப்பது வழக்கம். அப் பதிவிட்ட சமயம் என் மொபைல் சார்ஜரில் இருந்தது. எனவே ரிமைண்டரை ஒரு பதிவாகவே வெளியிட்டேன். உலகத் தமிழர்கள் அனைவரும் அதை படித்து அறிந்தார்கள் என்பதே நான் ஒரு வலைப்பதிவாளனாக இருப்பதன் அர்த்தத்தை எனக்கு விளக்கியது.
இந்த ஐம்பதாம் பதிவு கொண்டாட்டத்தை ஒட்டி, நெடுநாளாக என் மனத்தில் இருப்பதை வெளியிட துணிபு கொண்டுள்ளேன். வெகுமூத்த பதிவரான டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என நான் வலையுலகுக்கு வந்த காலத்தில் இருந்தே நினைத்து வருகிறேன். ஆனால் மிக ஜுனியரான நான் எப்படி அதைக் கேட்பது என்று இயல்பிலேயே என்னுள் உள்ள தயக்கமும் சங்கோஜமும் என்னை தடுத்துவந்தது. ஒருமுறை என் பதிவில் பின்னூட்டிய டோண்டு அவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் நுட்பம் குறித்து சொல்லியிருந்தார். அப்போதுகூட கேட்க நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் ஐம்பது பதிவுகள் கடந்த நிலையில் வலையுலகில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைத்த தன்னம்பிக்கையோடு
டோண்டு ராகவனிடம் என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

கேள்வி நெ.1 : கம்ப்யூட்டர் துடைப்பதற்காக வைத்திருக்கும் மஞ்சள் துணியை நன்றாக விரித்துவைத்துதான் துடைக்க வேண்டுமா? மடக்கிய நிலையிலேயே துடைக்கலாமா?

கேள்வி நெ.2 : ஒருமுறை ஷட்டவுன் செய்யாமல் அப்படியே சுவிட்சை ஆப் செய்துவிட்டேன். இதனால் கம்ப்யூட்டருக்கு கெடுதி ஏதும் உணடா?

ரிமைண்டர்

இன்னிக்கு காலைலே ஐசிஐசிஐ பாங்க் போகணும். அப்புறம் சாய்ந்தரமா மார்க்கெட் போகணும். 7 மணிக்கு வியாசர்பாடி டாஸ்மாக் போகணும்.

Saturday, September 20, 2008

தூக்கமா வருது. தூங்கப் போறேன்.

ரொம்ப நேரமா முழிச்சுக்கிட்டு பிலாக் எல்லாம் பாத்துட்டு இருந்தேனா...தூக்கமா வருது. தூங்கப் போறேன்.

Friday, September 19, 2008

நான், இட்லி வடை மற்றும் டெக்கான் கிரானிக்கிள்

கருத்து கந்தசாமி என்று தொடர்ந்து டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகையின் பாக்கெட் கார்ட்டூனை இட்லி வடை தன் பதிவில் போடுகிறது. ஒரு நன்றி கிடையாது. ஒரு கர்டஸி கிடையாது (ரெண்டும் ஒண்ணுதானா). அதனால் இட்லி வடையில் வரும் பதிவுகளை தலைப்புகளை மாற்றி என் பதிவாக இடையிடையே போடுவது என உத்தேசித்து இருக்கிறேன். இல்ல போடக்கூடாதுன்னு சொல்றவஙகளுக்கு என் பதில்: அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்.
இதுல இன்னா பிராப்ளம்னா இட்லிவடைக்காரன் எடுக்குறது எல்லாமே சுட்ட சமாச்சாரம். அதை திரும்ப ஒருக்கா சுட்டா என்னா சுடாட்டி என்னான்னும் இருக்கு. இதைப் பத்தி பதிவுலக நண்பர்கள் கருத்தைச் சொல்லலாம்.

Wednesday, September 17, 2008

காதலும் பெரியாரும்

காதல் பற்றி பெரியார் என்ன சொல்லி இருக்கிறார். காதல் என்ற உணர்வு உன்னதமானதா? அது புனிதத்தன்மை வாய்ந்ததா என்பது குறித்து குடியரசு தலையங்கத்தில் ஒரு உளவியல் கண்ணோட்டத்துடன் பெரியார் அந்தக் காலத்திலேயே (1931) நெத்தியடியாக எழுதியுள்ளார். அதை, காதல் எல்லாம் டுபுக்கு என்ற தலைப்பில் நேற்று நள்ளிரவில் பதிவாக போட்டுள்ளேன். அநேக வெளிநாட்டு தமிழர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். காலையில் எழுந்திருந்து ஆபிஸிலும் வீட்டிலும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் தமிழர்களும் இதைப் படிக்க வேண்டும் என்ற நல்நோக்கில் அதுகுறித்த அறிவிப்பு பதிவாக இதை வெளியிடுகிறேன்.

காதல் எல்லாம் சும்மா டுபுக்கு... பின்னுகிறார் பெரியார்

அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

RESERVATION - Karunanidhi writes to Manmohan Singh

We have been very strongly opposing the concept of creamy layer, right from its inception. In fact, we have been insisting that no economic criterion by way of annual income of the parents of the students should be inserted for reservation to socially and educationally backward classes, as contemplated by the constitution of the India. Due to exclusion of creamy layer, about 400 seats in higher educational institutions remain unfilled during the current academic year. On this unfilled vacancies, the Supreme Court of India has recently held that there is no bar in filling these vacancies from among the students under the Open Competition category.
27% reservation to OBCs is not being implemented fully, only one third of the prescribed quota has been implemented, excluding the creamy layer. If these reduced number of vacancies originally meant for OBCs are filled from among the candidates of the Open Competition category, the OBCs are afraid that there will be a big setback to their right of reservation

Monday, September 15, 2008

இந்திய பதிவர்களிடம் ஒரு கேள்வி

அரசவை கவிஞர் போல அந்தஸ்து கொண்ட சிலர் ஒன்று குழுமி, ஒரு மாநில முதல்வரை சுமார் ரெண்டே முக்கால் மணி நேரம், நீ இந்திரன், நீ சந்திரன், உன்னிடம் இருக்கே பவர் அதுதான் பவர், அதை யாராச்சும் கட் பண்ண முடியுமா..நீ எந்திரிச்சா, தமிழ்த்தாய் எந்திரிச்சா மாதிரி...நீ எழுதுகோல் எடுத்தா தொல்காப்பியன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுவான் .... என்கிற ரீதியில், கேட்கிற ஆளே வெட்கித் தலைகுனிகிற அளவுக்கு கவியரங்கம் என்ற பெயரில் புகழ்ந்து பாடுவார்களா? அதையும் ஆனந்தமாக ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வாரா? பொது நிகழ்ச்சியாக இது ஊடகங்களில் காட்டப்படுமா?
இந்தியா முழுமையில் இருந்தும் எழுதும் பதிவர்களிடம் இதை சீரியசாகவே கேட்கிறேன். எந்த மாநிலத்திலாவது இந்த மாதிரி ஒரு வடிவம் இருக்கிறதா?

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சர்வவல்லமை பொருந்திய மாயாவதி இருக்கிறார். அவருக்கு இப்படி ஜால்ரா கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? மராட்டியத்திலே பைப் புகைத்துக்கொண்டு பந்தாவாக பால் தாக்கரே என்று ஒரு தலைவர் இருக்கிறார். அவரை புல்லரிக்க வைக்கிற மாதிரி கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?
தயவுசெய்து சொல்லுங்கள்.

Friday, September 12, 2008

கொச்சு கள்ளி....(ஓணம் ஸ்பெஷல்)

எனக்கு நிறைய கேரள நண்பர்கள் உண்டு. நண்பிகளும். அவர்களிடம் இருந்து சேர நன்னாட்டின் பலவித பண்பாட்டு, கலாசார விஷயங்களை கேட்டறிந்து வியந்திருக்கிறேன்.
குட்டிப்புரம் என்ற கேரளத்தின் அழகிய சிற்றூரைச் சேர்ந்த, அம்புலி என்ற அற்புத பெயர் கொண்ட ஒரு பேரழகி சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஸ்நேகிதியாக இருந்தாள். இப்போது அது முறிந்துபோன உறவு. பல கேரள அரசியல் விகடங்களை அம்புலி என்னிடம் கூறியிருக்கிறாள். அதில் ஒன்றுதான் ஒரு எம்எல்ஏவை பற்றிய கலக்கலான கதைகள். அந்த எம்எல்ஏவின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. தவிரவும் கேரள அரசியலில் நான் வீக். இந்த எம்எல்ஏவின் (இப்போது மாஜியா என்பதும் தெரியாது) கோக்குமாக்குள் கேரளத்தில் பிரபலமாம். அதையட்டி பல இட்டுக்கட்டிய கதைகளும் சேர்த்து இந்த எம்எல்ஏ குறித்த ஜோக்குள் அங்கு படு பாப்புலர். மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் வகையை போல.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இது:

எம்எல்ஏ ஒரு முறை சட்டைவாங்க துணிக் கடைக்கு போயிருக்கிறார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்¢ஸ்கேர்ளாக இருந்தாள். சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் எம்எல்ஏக்கு தேவை. எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: 'கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?' உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாளாம்.

மலையாள மொழி தெரிந்திருந்தால் இந்த ஜோக்கின் தாத்பர்யம் சரியாக புரியும். கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம். வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள். அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான். அதன் இன்னொரு அர்த்தம், 'அடி கள்ளி உண்டாயிருக்கியா' என்பதை ஒத்திருந்ததால்தான் அந்த அறை கிடைத்ததாம்.

Monday, September 8, 2008

குமுதம் ஆசிரியருக்கு குட்டு ஞானக்கூத்தனுக்கு திட்டு

சின்னம்மா: எஸ்.ஏ.பி.

மணிமேகலை பிரசுரம், சென்னை-17, 1992.

"அறிஞரும் கவிஞருமான ஞானக்கூத்தன் அணிந்துரை அளித்தது நான் பெற்ற பேறு..." எஸ்.ஏ.பி.


ஞானக்கூத்தனின் 'அணிந்துரை'யிலிருந்து:

..............தொடர்கதையாக வெளிவந்த காலத்தில் ஏராளமானவர்கள் படித்து மகிழ்ந்த நாவல்தான் திரு. எஸ்.ஏ.பி.யின் சின்னம்மா....முத்தையா என்ற செல்வர் திடீரென்று இறந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற குடும்பத்தில் ஏற்பட்டவற்றை பதற்றமற்ற நடையில் சொல்கிறார் ஆசிரியர்.....13 வயதான மெய்யப்பன்தான் கதையில் முந்தித் தெரியும் பாத்திரமாக படைக்கப் பெற்றிருக்கிறான். கதையின் அரங்கில் முக்கியமாக வரும் இந்தப் பாத்திரத்தின் பின்னே அதன் சின்னம்மாவாக வரும் நளினி என்ற பாத்திரம் கிளைகளினால் மறைக்கப்பட்ட பழம் போல அமைந்திருக்கிறது. மெய்யப்பனின் பாத்திரத்தை ஆசிரியர் அக்கறையுடன் உருவாக்கியிருக்கிறார். மிகக் குறைந்த அளவே எழுதி பாத்திரங்களையும் நிலைமைகளையும் வாசகர் மனதில் உருவாகும் வகையில் அமைந்துள்ளது திரு. எஸ்.ஏ.பி.யின் எழுத்து. கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு, நடை முதலானவற்றில் துலாக்கோல் பிடித்திருக்கிறார் திரு. எஸ்.ஏ.பி.

------

நா. முத்துக்குமார் அப்பா மாதிரிதான் என் அப்பாவும். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருக்கிறார். எல்லா தமிழ் மாத, வார, இலக்கிய. அ- இலக்கிய பத்திரிகைகளின் முதல் இதழ் தொடங்கி அதன் மொத்தத் தொகுப்பு பைண்டு வால்யூம்களும் நூலகத்தில் உள்ளன. இன்னும்கூட அழகாகப் பராமரிக்கிறார். எனக்குத்தான் இதையெல்லாம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. இன்று மாலை எதேச்சையாக ஒரு வால்யூமை எடுத்தேன். லயம். காலசுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்டு பிரமிளின் எழுத்துகளை அதிகம் போடுவதற்காகவே நடத்தப்பட்ட இதழ். அதன் 14-வது இதழில் ஒரு பக்கத்தில் (பக்க நம்பரே கிடையாது) மேற்கண்ட சின்னம்மா நூலில் உள்ள அணிந்துரையை பிரசுரித்திருக்கிறார்கள். வேறு எந்த கமெண்டும் அதில் இல்லை. ஞானக்கூத்தனை கடுமையாக விமர்சித்தவர் பிரமிள். எஸ்.ஏ.பி.யை ஐஸ் வைப்பதற்காக இப்படி ஒரு வழிசல் விமர்சனத்தை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ.பி.யும் அவர் அணிந்துரை கொடுத்ததற்காக எப்படி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் பாருங்கள் என்று காட்டுவதற்காகவே இதை லயம் பிரசுரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பாடா...பதிவின் தலைப்பு ஜஸ்டிபை ஆகிவிட்டது.

Saturday, September 6, 2008

மெக்சிகோ சலவைக்காரி ஜோக் இதுதான்...

கேபிள் சேகர் என்பவர் சுஜாதாவின் ஒரு கதையை திருட்டுத்தனமாக எடுத்து குறும்படம் தயாரித்துவிட்டார் என்று பரிசல்காரன் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார். சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்காட்டோம் என்ற தலைப்பில். அதற்கு வந்த பின்னூட்டங்களில் டிபிசிடி என்பவர், பலமுறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி என்ற ÔஆÕ நகைச்சுவைத் துணுக்குக்கு சுஜாதா உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அது சம்பந்தமாக ஒரு விளக்கம்:
அந்த ஜோக்கை எந்த இடத்திலும் சுஜாதா அழுத்தமாகவே கூறவில்லை. வசந்தோ இன்னபிற கேரக்டரோ மெக்சிகோ ஜோக்கை சொல்ல வரும். ஆனால் அது சொல்லப்படாமல் விடப்படும். கடைசிவரை அந்த சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து, எந்த கதையிலாவது வெளியிட்டுவிட மாட்டாரா என ஏங்க வைத்திருப்பார் சுஜாதா. நல்ல உத்தியாகவும் அதை பயன்படுத்தினார்.

அது இருக்கட்டும். மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போது நான் சொல்கிறேன்.

மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க.

Tuesday, September 2, 2008

வலையுலக ஜே.கே. ரித்தீஷ்

ஏன் இவ்வளவு நாளாக ஆளைக் காணோம்?

நெடிய சுற்றுலா போயிருந்தேன். மலேசியாவுக்கு. கேமரான் மலை, பினாங்கு தீவுகள், கோலாலம்பூர் என்று உல்லாசத் திரிதல். அற்புத மது ரகம். சீன, மலேய, இந்தோனேசிய பெண்கள் பலருடன் சினேகம். பிளாக் பக்கம் வரவே இல்லை. ஒன்றரை மாதத்துக்குப் பின் திரும்பி வந்து பார்த்தால்....

பார்த்தால்?

அவ்வளவு டல். ஒரு பத்து பதினைந்து பேர் மட்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மாறி, மாறி ராவடி. மாத்தி மாத்தி முதுகுசொறி பின்னூட்டம். அலுப்பாக இருக்கிறது. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என பேரறிந்த எழுத்தாளர்கள் வந்து சுவாரஸ்யமும் காத்திரமும் மிகுந்த பதிவுகள் போடுவதால் பல ஸ்டீரியோடைப் பதிவர்கள் சோபை மங்கி போய்க் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் இணையத்துக்கு வலியப் போய் நல்லா இருந்ததுங்க என்று ஒரு லெட்டர் போட்டு பாராட்டிவிட்டு, கூடவே தன் இணைய முகவரியும் கொடுத்து விடுகிறார்கள். விளம்பரம் கிடைக்கும் ஆசையாக இருக்கும். பாவமாக இருக்கிறது.

இப்படி இருந்தால் இணைய தமிழ் அடுத்த கட்டத்துக்கு போகுமா?

ஆனந்தவிகடனில் என் எழுத்து வந்திருக்கு. என் போட்டோ வந்திருக்கு என்று புளகாங்கிதம் அடைந்து அல்லவா பதிவு போடுகிறார்கள். அச்சு உலகைத் தாண்டியவர்கள் என்று ஜம்பமாக இருக்க வேண்டியவர்கள் இப்படி அசடு வழிந்துகொண்டு, அச்சுவேட்கையர்களாக இருக்கும்போது அடுத்த கட்டமாவது மண்ணாங்கட்டியாவது.

சமீபத்தில் படித்து நொந்த பதிவு?

ஆனந்த விகடன் அட்டைப்படத்தை பாத்து நானே வரைஞ்சது என்று ஒருவர் அச்சமூட்டும் பெண் படத்தைப் போட்ட பதிவு. அதற்கு, மூக்கு சரியா வந்திருக்கு. பட் உதடுதான் பெரிசா போச்சு என்று சீரியசாக பின்னூட்டம் போட்ட சில பதிவர்கள். இதையும் சூடான இடுகைகள் பகுதிகள் போட்ட தமிழ்மணர்கள். இவர்களுக்கு ரெண்டு சூடான இடுகை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

அசத்தியது?

பெரியாரின் வானொலி பேட்டியையும் அவரது காரைக்குடி, கும்பகோண பொதுக்கூட்ட உரையையும் ஒலிப்பதிவாக போட்ட அந்த பதிவு. இப்போது தட்டச்சு செய்கையில் பதிவின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும். பெரியாரின் குரலைக் கேட்டது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வலையுலக ஜே.கே. ரித்தீஷ் என்று யாரைச் சொல்லலாம்?

லக்கிலுக்

வெளிநாட்டு பயண அனுபவ பதிவு போடுவீர்களா?

மாட்டேன். (இப்போதைக்கு).

விநாயகர் சதுர்த்தி?
அது விடுமுறைநாள் ஆயிற்றே.

ங்கொய்யால...நீ பெரிய புல்டாக்கா?

................................