Thursday, June 5, 2008

மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. பனியன் போட்டிருப்பவன்.

2. ஹமாம¢ சோப் தேய்ப்பவன்.

3. சட்டைப் பையில் நீலக்கலர் மூடி தெரியும்படி ரெனால்ட் பேனா வைத்திருப்பவன்.

4. பெல்ட்டில் உறை போட்டு செல்போன் வைத்திருப்பவன்.

5. டிசம்பர் கடைசியில் டைரி, காலண்டர் கிடைக்குமா என பார்ப்பவரிடம் எல்லாம் கேட்பவன்.

6. சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவன்.

7. பைக்கின் சைடில் பெட்டி வைத்திருப்பவன்.

8. பிஸ்லரி தண்ணீர் தீர்ந்ததும் பாட்டிலை மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வருபவன்.

9. ரிமோட்டுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பவன்.

10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்.

11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன்.

12. என் மகன் எஸ்எஸ்எல்சியில் 405 மார்க் என்று எஸ்எம்எஸ் அனுப்புபவன்.

17 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பொய்யன்,

இதுல நாலு தான் நான் செய்வது. சரி, உங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் ?

/50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்/

ஹா ஹா ஹா

நாஞ்சில் பிரதாப் said...

1. மாசக்கடைசியில் கடன் வாங்குபவன்.
2. வீட்டில் லைட்டையும், பேனையும் அடிக்கடி அணைத்துக்கொண்டிருப்பவன்.
3. கடையில் தனியாக சென்று டீ குடிப்பவன்.
4. பல வருடங்களாக இருக்கும் மோட்டர் சைக்கிளை மாற்றாதவன்.
5. கிரெடிட் கார்ட் வைத்திருந்ருதும் பயன்படுத்தாதவன்.
6. அதிக கடவுள் பக்தி கொண்டவன்.
7. மிஸ்டு கால் அதிகம் கொடுப்பவன்.
இப்படியும் சில மிடில் கிளாஸ் மாதவன்கள் இருக்கிறார்கள் நண்பரே...

முரளிகண்ணன் said...

இன்னும் இருக்கு
1. தேர்தல் அன்னைக்கு டி வி மட்டும் பார்க்கிறது
2.வரதட்சினையில் பேரம் பேசுவது
3.சொந்த ஜாதி பெண்னை காதலிப்பது
4. வேலைக்காக மட்டும் படிப்பது
5. சண்டே மட்டும் அசைவம் சாப்பிடுவது
6.மசாலா படம் மட்டும் குடும்பத்தோடு பார்ப்பது
சொல்லிக்கிட்டே போகலாம்

பொய்யன் said...

ப்ரிய ஜ்யோவ்ஜி

முதல் இரண்டு என்னுது. பனியன், ஹமாம்

பொய்யன் said...

அன்பு நாஞ்சில்

மிடில்கிளாஸின் உச்ச அடையாளம் மிஸ்டுகால். அதை மறந்துவிட்டேன். நீங்கள் பிடித்துவிட்டீர்கள். சபாஷ்

பொய்யன் said...

அன்புள்ள முரளி

நன்றாய் இருக்கிறது. மீதி ஆறையும் இன்னொரு பின்னூட்டமாக போட்டுவிடுங்களேன்.

வளர்மதி said...

சில சந்தேகங்கள் பொய்யன் :)

1) கை வச்ச பனியனா இல்லை கையில்லாத பனியனா?

2) அப்போ ... ”ஆரோக்கிய வாழ்வினையே காப்பாற்றும் லைஃ பாய்” போடுபவன்? (நான் உபயோகிப்பது ... அதனால் ஒரு பயத்தோடு)

நாலாவது பாயிண்டுல நான் காலி :(

மற்றது, ”சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவது” ஆதிக்க சாதித் திமிரின் தொடர்ச்சி என்பது எனது அபிப்பிராயம் :)

பொய்யன் said...

அன்புள்ள வளர்மதி

1. கைவச்ச பனியன்.

2. லைப்பாய், ரெக்ஸோனா எல்லாம் இந்த ரகத்தில் வரும்.

3. உடனே மாற்றவும். செல்போனுக்கு கவர் போட்டாலும் மிடில்கிளாஸ்தான்.

4. சலூன் விவகாரம் இன்னும் நடக்கிறது. ஆதிக்கத் திமிர்தான் வேறு என்ன. இப்போதைய மாடர்ன் தலைமுறைதான் சிகை திருத்தத்தில் இருப்பவர்கள். அவர்களிடமும் இந்த மிடிலர்கள் போய் எவ்வித தயக்கமும் இல்லாமல் கைகளை உயர்த்துகிறார்கள். அந்த இளைஞர்கள் அந்த நேரத்தில் எதிர்கொள்ளும் அவமானம் பயங்கரமானது. அவர்களின் உணர்வுகளைச் சிதைப்பது.

கிரி said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா செம காமெடி பதிவு மற்றும் அதற்கு வந்த பின்னூட்டங்களும்.

என் பங்குக்கு நான் சொல்கிறேன்..

1.நண்பர்களுடன் சாப்பிட அல்லது கொறிக்க செல்லும் போது பசியில்லை என்று கூறுபவர் பசித்தும்.

2.செல் போன் உடைய இயர் போனை எப்போதும் கழுத்தில் மாட்டிக்கொண்டு சுத்துபவர்.

3.என்னடா இது விரைவு மற்றும் சொகுசு பேருந்தா வருதேன்னு புலம்புகிறவர்.

4.ஆடி தள்ளுபடி போன்ற நாட்களை நினைவு வைத்து அது வரை துணி எடுக்காமல் இருப்பவர்.

5.ஏன்டா! பக்கத்து வீட்டு பய்யன் எப்படி நல்லா படிக்கிறான் நீயும் இருக்கியே என்று திட்டி கொண்டே இருப்பவர்.

6. 10 ருபாய் பொருளுக்கு அரை மணி நேரம் வாக்குவாதம் செய்பவர்.

7. வெளிநாடு செல்பவர்களிடம், ஹி ஹீ வரும் போது ஒரு வாட்ச் வாங்கிட்டு வாங்கன்னு சொல்பவர்.

8. பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம் புலம்பி விட்டு, பின் அதற்கு பழகுபவர்.

9. தவணை முறையில் வாங்கிய வண்டியை துடைத்து துடைத்து பாதுகாப்பவர்.

10. மெரீனா பீச்சில் சுண்டல் சாப்பிடுபவர் (தனியாகவும் குடும்பத்துடனும் காதலியுடனும்)

11. மனைவிக்கு ஹல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கி கொடுப்பவர்.

பொய்யன் said...

பின்றீங்களே கிரி. டஜனுக்கு ஒண்ணு குறைவா இருக்கே. அதையும் போட்ருங்க.

இத்துப்போன ரீல் said...

//பின்றீங்களே கிரி. டஜனுக்கு ஒண்ணு குறைவா இருக்கே. அதையும் போட்ருங்க.//


திருட்டு சிடியில் மட்டுமே புதுப்படம் பார்ப்பவன்!.
இதை கிரியின் கணக்கில் வைத்துக் கொண்டு டஜனை பூர்த்தி செய்யுங்கள்!

பொய்யன் said...

serthachu iththuppona reel avarkale. puthu padam patri iththuppona reel solvathu suvarasyamana nagaimuranaka irukkirathu :)

நிலவுக்காதலன் said...

மிகவும் அழகாக சித்தரிக்கப் பட்ட ஒரு blog.. love this.. thanks to all. brilliant.

Anonymous said...

ஆபீஸ் பார்டியில் தரும் தின்பண்டங்களை தின்னாமல் வீட்டுக்கு எடுத்து சென்று குழந்தைகளுக்கு கொடுப்பவன்
பைக்குக்கு பெட்ரோல் போடும்போது மறக்காமல் வீலில் காற்று செக் அப் செய்து கொள்ளுபவன்
டெலிபோன் இபீ பில் கட்ட கடைசி தேதியில் வருசையில் நிற்பவன்
தலைவலி காய்ச்சல் வந்தால் மளிகை கடையில் மருந்து வாங்கி சாப்பிடுபவன்
இந்த பேன்ட் 3வருஷமாக உழைக்குது இந்த செருப்பு 2வருஷமாக உழைக்குது என பீற்றி கொள்பவன்
டெட்டாலில் தண்ணீர் கலந்து ஆண்டி சேவிங் லோஷனாக உபயோகம் செய்பவன்
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மறக்காமல் பல்குட்சியும் சீரகத்தையும் எடுத்து கொள்பவன்
முழு டிக்கெட் வாங்க சொல்லும் கண்டக்டரிடம் குழந்தையின் வயதை குறைத்து சொல்லுபவன்
அப்புறம் இப்படி பதிவுகளுக்கு யோசிச்சு யோசிச்சு பின்னுட்டம் போடுபவன் (என்னை மாதிரி )

Unknown said...

இன்னும் உண்டு....
extra1: டூத்பேஸ்ட் முடிந்தபின்னும் காலியான tube-ஐ வருடக்கணக்கில் பயன்படுத்துவான்.

extra2: பொது இடங்களில், தனது தங்க செயின் தெரிவதற்காகவே, சட்டையை முழுவதுமாகத்திறந்த மாதிரி நடப்பான்.

Unknown said...

இன்னும் நிறைய இருக்கு.....
anex1: தங்க சங்கிலி தெரிவதற்காகவே, சட்டையை முழுவதுமாக காற்றுவாங்குகிற சாக்கில திறந்து விட்டிருப்பான்.
anex2: காலியான டூத்பேஸ்ட்டையும் எடுத்தெரியாமல் கடைசிவரையில் உபயோகிப்பான்.
anex3:நெருக்கடியான பேரூந்துகளில், கிழிந்துபோன கர்ச்சீப்பினை சன்னல் வழியாக போட்டு ஏறுவான்.

@Ganshere said...

Jolly pathivu. Padhiva vida pinnuttam arumai. thanks to all.....

Add this also
plastic coverellam Saththu vaipavan(l).