Saturday, June 7, 2008

முதல் உலகப் போர்னா இன்னா....

வீக்எண்ட். நல்லவேளை நண்பர் கூட்டத்தில் இருந்து தப்பி விட்டேன். வீட்டில் அம்மாவும் இல்லாததால் சர்வசுதந்திரம். தணுத்துக் குளிர்ந்த பீரை உள்ளிறக்கிக் கொண்டே கணிணி இயக்கிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டு மாமி உள்ளே வந்தார். எனக்கு ரொம்ப நெருக்கம். என்னடா பண்ணிட்ருக்கே என்றார். பிளாக் விவரம் எல்லாம் தெரியாதவர். சும்மா கட்டுரை எழுதிப் பாக்றேன் என்றேன். எங்கே காமி. மிடில் கிளாஸ் கே.கே வை காண்பித்து வைத்தேன். பிலுபிலுவென பிடித்துக்கொண்டார். என்ன எழவுடா இது. இப்படியெல்லாமா எழுதறது. நாலு விஷயம் தெரிஞ்சுக்கற மாதிரி எழுது. ஜென்ரல் நாலெட்ஜ் வளக்குற மாதிரி எழுதணும்டா என்று தொடங்கி ஏகப்பட்ட லெக்சர் கொடுத்து கிளம்பிவிட்டார். மனதே வெறுத்துவிட்டது. சரி ஒரு சேஞ்சுக்காக நமக்கு பிடித்த டஜன் பாயிண்ட் கணக்கை வைத்து ஒரு சீரியஸ் பதிவு போடலாம் என தீர்மானித்து விட்டேன். மாமிக்காக ப்ளீஸ் மன்னித்து விடவும்.

உலகின் மகா சீரியஸ் விஷயமாகி, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட முதலாம் உலகப் போர் பற்றி நண்பர்களே இப்போது பார்க்கலாமா.... (தோரணை வந்துவிட்டது பாருங்கள்).

முதல் உலகப் போர் (1914 - 1918)

1. ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாந்தும் அவனது மனைவியும் 1914 ஜுன் 18ல் காரில் போகும்போது செர்பிய நாட்டவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா படை எடுத்தது.

2. நாடு பிடிக்கும் வெறியில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் குதித்தது. ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் இணைந்தன.

3. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் ஈடுபட்டன.

4. 1914 ஆகஸ்ட் 4ல் முதல் உலகப் போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ரகசியமாக பிரான்ஸ், பிரிட்டனுக்கு ஆதரவளித்தது. இதனால் கடுப்பான ஜெர்மனி, அமெரிக்க கப்பல்களை குண்டுபோட்டு மூழ்கடித்தன. இதனால் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக¢கா போரில் குதித்தது.

5. நீர் மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் நேச நாடுகளை துவம்சம் செய்தது ஜெர்மனி.

6. போர்க்காலத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்து லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமானது. 1917ல் ஜெர்மனியுடன் லெனின் அரசு சமாதான உடன்படிக்கை செய்து போரில் இருந்து விலகியது.

7. போரில் ஜெர்மனி விஷ வாயுவைப் பயன்படுத்தி உலகை அதிர வைத்தது.

8. முதலில் ஜெர்மனிதான் வெற்றிகளை ஈட்டி வந்தது. ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பெரும் பலத்துடன் ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

9. இதனால் ஜெர்மனி மக்கள் அரண்டுபோய், மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் இறங்கினர். சொந்த மக்களை ராணுவத்தைக் கொண்டு சுட்டுக் கொல்லவைத்தார் கெய்சர்.

10. 1918 நவம்பர் 11-ம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குள் நுழைந்தன நேச நாடுகளின் படைகள். ஜெர்மனி சரண் அடைந்தது. மன்னர் கெய்சர் ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

11. முதல் உலகப்போர் மொத்தம் 1561 நாட்கள் நடந்தது. 2 கோடி பேர் இறந்தனர். போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலுக்கு 2 கோடி மக்கள் மடிந்தனர்.

12. போருக்கு காரணமான ஆஸ¢திரியா பல்வேறு இன மக்களைக் கொண்டது. முதல் உலகப் போருக்கு பிறகு ஆஸ்திரியா துண்டுதுண்டாகச் சிதறியது.

ஸ்ஸ்ஸ்...அப்பா...எவ்வளவு சீரியஸான பதிவு. ச்ச்சீ...போங்க எனக்கே வெக்கமா இருக்கு.

8 comments:

Anonymous said...

good stat keep it up

பொய்யன் said...

nanri anony. mami romba santhosappadum

Anonymous said...

தம்பி இதெல்லாம் இங்க வேலைக்காவாது. நீ வழக்கம் போலவே எழுது. டகால்டி பதிவுகளைதான் மக்கள் விரும்பராங்க

உண்மைத்தமிழன் said...

//ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாந்தும் அவனது மனைவியும் 1914 ஜுன் 18ல் காரில் போகும்போது செர்பிய நாட்டவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா படை எடுத்தது.//

காரில் செல்லும்போது அல்ல.. ரயில் நிலையத்தில் என்று படித்திருக்கிறேன்..

கிரி said...

//பிலுபிலுவென பிடித்துக்கொண்டார். என்ன எழவுடா இது. இப்படியெல்லாமா எழுதறது. நாலு விஷயம் தெரிஞ்சுக்கற மாதிரி எழுது. ஜென்ரல் நாலெட்ஜ் வளக்குற மாதிரி எழுதணும்டா என்று தொடங்கி ஏகப்பட்ட லெக்சர் கொடுத்து கிளம்பிவிட்டார்//

ஹா ஹா ஹா

மாமியை கேட்டதாக சொல்லுங்க. நல்லவேளை நீங்க வேற ஏதும் பார்க்கும் போது மாமி வரலை ;-(((((

பொய்யன் said...

anony ANNA

sari. Thirunthitten. Aduthu varum paarunga

பொய்யன் said...

ரயில் அல்ல கார்தான். பாருங்கள் பொய்யன் சொல்வது உண்மை. உண்மை சொல்வது பொய். நல்ல நகைமுரண். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி உண்மைத் தமிழன் அவர்களே

பொய்யன் said...

கிரி கேட்டார் என மாமியிடம் சொல்லிவிட்டேன். tamil-stories.blogspot.com மாதிரி பாத்திட்டிருப்பேன்னு நெனச்சீங்களா. ச்சீ...நான் நல்ல பையன்.