ஊரில் சினிமாத் தியேட்டர் மற்றும் பஸ் நிலைய கழிப்பறைச் சுவர்களில் 'கலாவுக்கும் கோபுவுக்கும் கள்ளக் காதல்', 'ஒண்டுக்கிருந்துவிட்டு ஒருமுறை சுண்டாவிடில் நிண்டொழுகுமாம் சலம்', 'அமிர் எங்கள் உயிர், நவம் எங்கள் மயிர்' என்றெல்லாம் சொற்களை எழுதுவதில் இன்பமடையும் கூட்டமொன்று உண்டு. இது ஓர்வகையான மனப் பிறழ்வும்கூட. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்¢ள பொதுக் கழிவறைகளில் இவ்வாறெல்லாம் எழுதி இன்பமுற வாய்ப்பில்லாததால் நீங்கள் இணையதளங்களில் பின்னூட்டம் எழுதி மகிழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களையிட்டுக் கோபப்படுவதைக் காட்டிலும் உங்கள் மீது இரக்கம்கொள்வதே சரியாயிருக்கும்.
மேற்கண்ட பத்தி, யமுனா ராஜேந்திரன் என்பவரை தும்பு தும்பென தும்பிக் கிழித்து ஷோபாசக்தி எழுதிய கட்டுரையில் உள்ள ஒரு பகுதி. முகத்தை மறைத்துக்கொண்டு என்மீது மட்டுமல்லாமல் யமுனா மீதும் மற்றவர்கள் மீதும் ஆதாரமற்ற பின்னூட்டக் கற்களை எறிபவர்களுக்கு ஒரு வார்த்தை என்று தொடங்கி, அவதூறு அனாமிகளுக்கு இந்த சாட்டையை வீசியிருக்கிறார் ஷோபாசக்தி.
அவர் எழுதிய கட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்கும் அளவுக்கு நுட்பம் எனக்கு இன்னும் கணிணியில் கைவரப்பெறவில்லை. எனவே நீங்களே தேடிக்கொள்ளுங்கள். சிரமத்துக்கு மன்னிக்கவும்.
Tuesday, June 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
http://tamilarangam.blogspot.com/2008/03/blog-post_1971.html
//அவர் எழுதிய கட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்கும் அளவுக்கு நுட்பம் எனக்கு இன்னும் கணிணியில் கைவரப்பெறவில்லை.//
நீங்கள் கணினியில்தான் அதை படித்திருக்க வேண்டும். அந்தப் பக்கத்தைத் திறந்து, அதன் உரலை செலக்ட் செய்து கண்ட்ரோல் சி மூலம் நகலெடுத்து இப்பதிவில் ஒட்டுவதற்கு என்ன சிறப்பான கணினி திறமை தேவைப்படும் என நினைக்கிறீர்கள்?
நிற்க. நீங்கள் குறிப்பிட்டக் கட்டுரையின் சுட்டி இதோ. பார்க்க: http://www.satiyakadatasi.com/archives/135
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி சிறில் அவர்களே.
ஓ...இம்புட்டு ஈஸியா. நன்றி டோண்டு அவர்களே. உரல் என்பதையே அஞ்சு மாசத்துக்கு முன்னாலதான் தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். இந்த லட்சணத்தில் பதிவில் படமெல்லாம் போட வேண்டும் என்ற ஆசை வேறு இருக்கிறது. லட்சுமிராய் கடிதட படம் 6 இருக்கு. ஹ§ம்ம்ம¢ம்....
Post a Comment