Wednesday, April 16, 2008
பீர் சாமியாரும் அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் திடீர் தற்கொலை
சென்னை சிட்லபாக்கத்தில் ஆசிரம் அமைத்து 3 பொண்டாட்டியைக் கட்டி செய்தித் தாளில் பரபரப்பாக அடிபட்ட பீர் சாமியாரை நினைவிருக்கிறதா? அவரும் அவரது இளம் காதல் மனைவி டாக்டர் திவ்யாவும், சாமியாரின் முதல் மனைவி வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டனர். பரபரப்புப் பத்திரிகைகள்தான் இந்த சாவுக்குக் காரணமோ?
Tuesday, April 15, 2008
லக்கிலுக் பார்த்த பார்வை படமே நின்னு போச்சு...
ராமர் ஒண்ணுக்கு அடிக்கிற படத்தை லக்கிலுக் தன் பதிவில் போட்டார். Ôவணக்கம்மாÕ என்ற படத்தின் இன்விடேஷனில் இருந்த படம் அது. அன்புத்தென்னரசன் தயாரிக்கிற படம். ஒண்ணுக்கு படத்தை மெட்ராஸ் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. இந்து முன்னணி கோஷ்டி போய் ஒரே ஆர்ப்பாட்டம். போலீஸ் குவிஞ்சு ரகளை. கடைசியில படப்பிடிப்பை நிறுத்தியாச்சு. ஷ§ட்டிங் இனிமே நடக்குமான்றதே சந்தேகமாம். ராமர் ஒண்ணுக்கு அடிச்ச போஸ்டர போட்ட சந்துரு என்பவரையும் போலீஸ் பிடிச்சிருக்காம். லக்கி சந்தோஷமா?
Tuesday, April 8, 2008
ஸ்ரேயாவை கட்டி அணைக்க முயன்றசங்கர மடத்தின் ஊழியருக்கு அறை
திருப்-பதி ஏழு-ம-லை-யான் கோயி-லில் சாமி கும்-பிட வந்த நடிகை ஸ்ரே-யாவை சங்-க-ர-மட துப்-பு-ரவு தொழி-லாளி கட்-டிப் பிடிக்க முயன்-றார். ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அவரை அறைந்-த-தால் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது.பிர-பல நடிகை ஸ்ரேயா, உகாதி தினத்தை முன்-னிட்டு திருப்-பதி கோயி-லில் சாமி தரி-ச-னம் செய்ய விரும்-பி-னார். இதற்கு திருப்-பதி எம்-எல்ஏ வெங்-கட்-ர-மணா ஏற்-பாடு செய்-தார். நேற்று அதி-காலை 2.30 மணிக்கு ஏழு-ம-லை-யான் கோயி-லுக்கு வந்த ஸ்ரேயா, சுப்-ர-பாத சேவா தரி-ச-னம் செய்-தார். பின்-னர் 3.45 மணிக்கு கோயி-லில் இருந்து வெளியே வந்-தார். அப்-போது ஒரு-வர், ஸ்ரே-யாவை நெருக்-க-மாக பின்-தொ-டர்ந்து வந்-தார்.அவர் ஸ்ரே-யா-வு-டன் கைகு-லுக்-க-வும், அவரை தொட்-டுப் பார்க்-க-வும் முயற்சி செய்-தார். அது முடி-யா-த-தால் ஸ்ரே-யாவை சுற்-றி-வ-ளைத்து திடீ-ரென கட்-டி-ய-ணைக்க முயன்-றார். இதில் ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அந்த ஆசா-மியை ஓங்கி அறைந்-தார். அதிர்ச்சி அடைந்த ஆசாமி, உட-ன-டி-யாக அங்-கி-ருந்து தப்-பி-யோடி விட்-டார். பின்-னர் ஸ்ரேயா அங்-கி-ருந்து புறப்-பட்டு சென்-றார்.அறை வாங்-கிய நபர், திருப்-பதி சங்-க-ர-ம-டத்-தில் துப்-பு-ரவு தொழி-லா-ளி-யாக வேலை பார்க்-கும் ஹரி என விசா-ர-ணை-யில் தெரி-ய-வந்-தது. ஆனால், அவர் மீது ஸ்ரேயா எந்த புகா-ரும் கொடுக்-க-வில்லை. இந்த சம்-ப-வத்-தால் திரு-ம-லை-யில் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது
Wednesday, April 2, 2008
சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் நடிகர்கள் உண்ணாவிரதம் ரஜினி பங்கேற்பாரா?
கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து நாளை மறுநாள் சேப்பாக்கத்தில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இதில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பெங்களூரில் தியேட்டர், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நாளை மறுநாள் (4&ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர¢ சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தலைமையில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.உண்ணாவிரத போராட்டத்துக்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 100 பேர் அமரும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர் நடிகைகள், பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருப்பார்கள். மேடைக்கு எதிரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே காவிரி பிரச்னைக்காக நடந்த ª நடிகர், நடிகைகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை விட ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல இப்போதும் அவர் தனியாக ஏதாவது போராட்டம் நடத்துவார் என்று ஒரு தரப்பினரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகிறார்கள்.கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடத்து வந்த Ôகுசேலன்Õ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்து ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். மீண்டும் வரும் 9&ம் தேதிதான் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது சென்னையில் இருக்கும் ரஜினி, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. உண்ணாவிரதத்தில் நேரடியாக பங்கேற்காமல் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு சால்வை அணிவித்து, ஆதரவு தெரிவித்து வந்துவிடுவார் என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)