Thursday, March 27, 2008

பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் காதல் மனைவியின் நிர்வாணப் படம்

இவர் வேறு யாருமல்ல. பிரெஞ்சு தேசத்தின் முதல் குடிமகள். அதாவது பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் காதல் மனைவியான கார்லா புரூனி. அந்தக் காலத்தில் மாடல் செய்தபோது இதுபோல் சர்வசாதாரண போஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார். அமெரிக்க, பிரான்ஸ் பத்திரிகைகளுக்கு கார்லா முன்பு மாடலிங்கில் கலக்கிய கிக் படங்களை எடுத்துப் போடுவதுதான் வேலை. லேட்டஸ்டாக வெளிவந்த நிர்வாணப் படம்தான் இது. நியூயார்க்கில் ஏலம் விடப் போகிறார்கள். டாலர்களைக் கொட்டி இதை வாங்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அசோசியேட் பிரஸ் வெளியிட்ட படம் இது. உலகம் முழுதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. தமிழ் வலையுலக தோழர்களின் பார்வைக்காக இதை வைக்கிறேன். இதன்பொருட்டு ஆபாசப் பதிவிட்டவன் என்று சொல்லி என்னை தமிழ்மணத்தில் இருந்து விலக்கிவிடும் அபாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அச்சமாக இருக்கிறது. தோழர்கள் ஓசை, தமிழச்சி, லக்கி முதலானோர் கருத்துச் சொன்னால் நலம்.

Tuesday, March 11, 2008

ஐயா ராமதாசுக்கு மொழிபெயர்ப்பு

வாசகர்களின் நலன் கருதி, அய்யா ராமதாஸின் தமிழ் ஓசை செய்திகளின் மொழிபெயர்ப்பு இங்கு அவ்வப்போது வழங்கப்படும்.
இன்றைய நாளிதழ் மொழிபெயர்ப்பு:
செய்தி: 10 நாட்களாகியும் அகற்றாத திமுகவினரின் வெட்டுருக்கள்
மொ.பெ: 10 நாட்களாகியும் அகற்றாத திமுகவினரின் கட்அவுட்கள்
செய்தி: பாசகவை எதிர்கொள்ள கிருட்டினா திட்டம்
மொ.பெ: பாஜகவை எதிர்கொள்ள கிருஷ்ணா திட்டம்
செய்தி: ஊர்திப் பேணல் துறையில் 7 பேர் பணியமர்த்தம்
மொ.பெ: வாகனப் பராமரிப்புத் துறையில் 7 பேர் நியமனம்
செய்தி: மூடுந்து மீது சரக்குந்து மோதி 7 பேர் சாவு
மொ.பெ: வேன் மீது லாரி மோதி 7 பேர் சாவு
இதுபோல் செய்தியின் பொருள் குறித்து அறிய பதிவர்கள் விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்

Sunday, March 9, 2008

பாடகர் மிஷ்கின்

அஞ்சாதே படத்தின் பாடல்களைக் கேட்கிற சமயத்தில்தான் கவனித்தேன். டைரக்டர் மிஷ்கின் 2 பாடல்களைப் பாடியிருக்கிறார். கண்ணதாசன் காரைக்குடி மற்றும் தலைப்புப் பாடலான அச்சம் தவிர். ஒரு படத்தின் தீர்மான சக்தியாக இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எப்பா இசையமைப்பு நமக்கு ரெண்டு பாட்டப் போடு. நானும் பாட்றேன் என்று சொல்லிவிட்டால் வேறு வழியில்லை. கர்ணகடூரமாக எதையாவது பாடிவைத்தால் அதை கேட்டுத்தான் தொலைக்க வேண்டியிருக்கும். அந்த ரகமாகத்தான் இருக்கும் என நினைத்து கேட்க ஆரம்பித்து அசந்து விட்டேன். பிசிறில்லாத, ஸ்ருதி சுத்தமான மயக்கும் குரல். ஹாட்ஸ் ஆப் மிஷ்கின்.பாரதியாரின் அச்சம் தவிர் பாட்டைக் கேட்கும்போது ஏழாவது மனிதனில் அச்சமில்லை அச்சமில்லை என்ற எஸ்பிபியின் உணர்ச்சியூட்டும் பாடல் நினைவுக்கு வந்தது. அந்த பாடலை ரேடியோவில் கேட்கவே முடியாது. அதுபோல ஒரு புரட்சிகரத்தன்மையுடன் இருந்த மற்றொரு பாடல் ஊமை விழிகளில் வரும் தோல்வி நிலையென நினைத்தால்...இந்தப் பாடலுக்கு ஆல் இந்தியா ரேடியோ தடையே போட்டிருந்ததாகக் கேள்வி. எதற்கென்று இதுவரை தெரியவில்லை.

காஷ்மீர் சிங் உளவாளியா, கடத்தல்காரனா....

35 வருஷம் பாகிஸ்தான் சிறைகளில் இரும்புக் குண்டுகளைப் பிணைத்துக் கிடந்தபோதுகூட காஷ்மீர் சிங் இந்த அளவு வருந்தியிருக்க மாட்டார் என்று தெரிகிறது. முஷாரப்பின் கருணையால் விடுதலையாகி இப்போது இந்தியா வந்திருக்கிறார். சொந்த ஊரான பஞ்சாப் போய் சும்மா இருக்க வேண்டியதுதானே. பேட்டி கொடுத்தார். இந்தியாவுக்காக உளவு பாத்தேன். மரண தண்டனை விதிக்கப்பட்டு, 35 வருஷம் ஜெயில்ல கஷ்டப்பட்டு அங்க இருக்கிற மனித உரிமை மந்திரி முயற்சியால எப்படியோ தண்டனையில இருந்து தப்பிச்சு வந்துட்டேன். ஆனா, இந்தியா எனக்காக என்ன பண்ணுச்சு. என்ன விடுதலை பண்றதுக்கு மாத்தி, மாத்தி வந்த எந்த மத்திய அரசும் முயற்சியே எடுக்கல. என் வீட்டைக்கூட கவனிக்கல. என் பொண்டாட்டி பத்து, பாத்திரம் தேச்சு பொழைக்க வேண்டி வந்தது என்று உருக்கமாக பேட்டி அளித்தார். பத்திரிகைகள் இதை பெருஸ§ பெருஸா போட்டது. பாகிஸ்தான் பத்திரிகையும்தான்.இதில்தான் வினை ஆரம்பித்தது. காஷ்மீர் சிங் விடுதலையாக ரொம்ப பாடுபட்டவர் அங்கு இருக்கும் மனித உரிமைகள¢ அமைச்சர் அன்சார் பா¢னே. காஷ்மீர் சிங்கின் பேட்டியைப் பாத்து அவர் கொதித்துப் போய்விட்டார். ÔÔஅப்பாவின்னு சொன்னதாலதானே அந்த ஆள் விடுதலைக்கு பாடுபட்டேன். இப்போ உளவாளின்னு அந்த ஆளே சொல்றாரே. அடப்பாவிÕÕ என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் அன்சார். இது தெரிந்ததும் காஷ்மீர் சிங் பயந்துவிட்டார். எங்கே திரும்பவும் ராவல்பிண்டிக்கு கூட்டிட்டுப் போய் ஜெயில்ல தள்ளிருவானோன்னு நினைச்சுட்டார். ஐயாங்களா நான் உளவாளி இல்லை. கடத்தல் பண்ணத்தான் போனேன். இந்த பத்திரிகைக்காரப் பயலுவ ஏதேதோ எளுதிப்புட்டானுக. என்ன வுட்ருங்கோ என்று இப்போ கதறுகிறார். சிறையில் முஸ்லீமாக மதம் மாறினேன் என்றும் இல்லை, இல்லை மதம் மாறவில்லை. உளவு பார்க்கிறதுக்காக நடிச்சேன் என்றும் மாறி, மாறி கூறுகிறார்.தேசத்துக்காக பாடுபட்டால் இப்படித்தான் ஆகுமா. தேசியம் என்பது பெருங்கதையாடல், தேசப்பற்று என்பது பேப்பெருங்கதையாடல் என்று பொளந்துகட்டிக் கொண்டிருக்கும் போஸ்ட்மாடர்னீய பதிவர்கள் இதுபற்ற¤ ஏதாவது சொல்லுங்களேன்.

காங். வேட்பாளர்கள் & பரிசுப் போட்டி

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு இடம். யார், யார் வேட்பாளர்கள். தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிக¢ கடலுக்குள் அத்தனை சுபலமாகச் சொல்லிவிட முடியுமா என்ன? வாசன் உறுதி என்கிறார்கள். இன்னொருவர் ஜெயந்தி நடராஜனாக இருக்கலாமாம். வேட்புமனுத் தாக்கலின் முடிவு நாளான 15&ம் தேதி காலைதான் டில்லி மேலிடம் சொல்லும்.கணிப்பதில் புலியான பதிவர்கள் 15&ம் தேதிக்கு முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்று சொல்லலாம். இரண்டு பெயரையும் சரியாகச் சொல்லும் ஒருவருக்கு ஆதிமூலத்தின் Ôபிட்வீன் த லைன்ஸ்Õ புத்தகத்தை பரிசாக அளிக்கிறேன். ஒரு பெயர் மட்டும் சரியாக சொல்பவர்களுக்கு, யாஹ§ மெசஞ்சர் சாட்டில் அண்மையில் மடக்கிய என் பெங்களுர் பிகரை தாரை வார்க்கிறேன்.ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடையை சொல்லியிருந்தால்?.... புத்தகத்தை கொடுக்கலமா. பிகரை பங்கிட முடியாதல்லவா. எனவே குலுக்கல்தான்

Saturday, March 8, 2008

வக்கீல் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி...திமுக வேட்பாளர்கள்

2.30&க்கு சொல்றேன்னேன். 11.30&க்கே திமுக தலைமை சொல்லிருச்சி. ஹி...ஹி..அந்த 2 எம்பிக்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.
வக்கீல் ஜின்னாக்கு 67 வயசு. கருணாநிதி ஊர்க்காரரு. 30 வருஷமா ஐகோர்ட் வக்கீல். திமுக தலைமைக் கழக வக்கீல்.
வசந்தி ஸ்டான்லி தலைமைக் கழக பேச்சாளர். வயசு 45. தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர். ஸ்ரீவில்லிபுத்தூர் சொந்த ஊர்.
தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக அஞ்சாநெஞ்சர் ரொம்ப டிரை பண்ணார். முடியலை. அப்படீன்னாக்கா தளபதிக்கு வெற்றியா...

திமுகவின் அந்த 2 எம்பி யார்?

ராஜ்யசபா தேர்தலில் திமுக 2 இடத்தில் ஜெயிப்பது உறுதி. யார் அந்த வேட்பாளர்கள்.இந்திய நேரப்படி இன்று பகல் 2.30க்கு மேல் அறிவிக்கிறேன்.ஆரூடம் பலிக்கும்.

ஜெயலலிதாவின் கவிதை

..........................................
..........................................
...........................................
விசையடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும்
புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் வரவேண்டும்
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்துவைக்கும்
திருநாளாய் மகளிர் தினம் மலரட்டும்
தையலை உயர்வு செய் எனும் பாரதியின் கவிதைக் கட்டளை
மானுடத்தின் பொதுச் சட்டமாகட்டும்.
உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து
தழிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்து
(மகளிர் தினத்தை ஒட்டி ஜெயலலிதாவின் கவிதை அறிக்கை)
தாயி...பின்ற

15-ம் தேதிக்கு பிறகு பா.ம.க. என்ன செய்யும்?

ஒன்றும் செய்யாது. திமுக கூட்டணியில்தான் இருக்கும். அதற்குள் கொஞ்சம் உதார் விட்டுப் பார்க்கலாம். கிடைத்தால் லாபம் என்பது மட்டுமே பாமகவின் கணக்கு.
திமுக கூட்டணிக்கு பாமக கொடுத்துவரும் லேட்டஸ்ட் தலைவலி ராஜ்யசபா தேர்தல். தமிழ்நாட்டில் இருந்து 6 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (தேவைப்பட்டால்) 26ம் தேதி நடக்கிறது. வேட்புமனு கடைசி நாள் வரும் 15. ராமதாஸ் தனக்குத்தானே வைத்திருக்கிற கெடு நாள்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. திமுக கூட்டணி சார்பில் 4 எம்பிக்களையும் அதிமுக கூட்டணி சார்பில் ஒரு எம்பியையும் ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம். ஒரு எம்.பி. பதவிக்குத்தான் போட்டி இருக்கிறது. அது மார்க்சிஸ்டுக்குத்தான் என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஊஹ§ம் எங்களுக்குத்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது பாமக. Ôதிமுகவுக்கு இரண்டு இடம் எதுக்கு? எங்களுக்கு ஒண்ணு கொடுங்கÕ என்கிறார்கள்.
Ôஅன்புமணிதான் இருக்கிறாரே. அவரோட பதவிக்காலம் முடிய இன்னும் வருஷங்கள் கிடக்கே. அப்புறம் எதுக்கு இன்னொரு எம்பிக்கும் அலைகிறீர்கள்Õ என்கிறது திமுக.
பாமகவுக்கு சீட் கிடைக்கவே கிடைக்காது என்று இன்னொரு முறையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் கருணாநிதி. ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை 2004ல் பாமகவுக்கு கொடுத்தாயிற்று. 2006ல் இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுத்தாயிற்று. இப்போது காங்கிரசுக்கு 2 இடமும் மார்க்சிஸ்டுக்கு ஒரு இடமும் கொடுப்பதுதான் நியாயம். பாமக இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த வரிசைக்கிரமத்தில் அடுத்தது பாமகவுக்குத்தான் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அடுத்த வாய்ப்பு என்பது 2010ல். நாங்கள் என்ன கேனயர்களா என்கிறது பாமக தரப்பு. கருணாநிதி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிவிட்டாரே என்றால். 15ம் தேதி வரை டயம் இருக்குல்ல. நடக்கிறத பாருங்க என்கிறார் ராமதாஸ் பிரயோஜனமில்லை. கதவு மூடியாகிவிட்டது. சம்பந்தி கிருஷ்ணசாமியை காங்கிரஸ் நிறுத்திவிட்டால் ராமதாஸ் வாய்திறக்க மாட்டார் என்று ஒரு திட்டம் இருக்கிறது. டில்லியில் சோனியா தூதர் அன்புமணியிடம் பிரஷர் கொடுக்கிறார்.
எனவே-
15ம் தேதிக்கு பிறகு ஒன்றும் நடக்காது. அன்புமணியின் நலன் கருதி அதிமுகவுக்கும் போகமாட்டார்கள். ஏதாவது போராட்டத்தைப் பண்ணிக்கொண்டே திமுக கூட்டணியில் இருக்கும் பாமக. இதுதான் நடக்கப்போகிறது. இது நடக்காவிட்டால் நான் வலைப்பதிவில் இருந்து விலகிக் கொள்கிறேன். சேலஞ்ச்.

Friday, March 7, 2008

மூன்றாம் பதிவு

தமிழ்மணத்தில் இணைப்பதற்கான மூன்றாம் பதிவு. :)

இந்த வலைப்பதிவில்...

என்னைச் சுற்றிலும் அரங்கேறும் அரசியல்,ஊடக,சினிமா,கலை இலக்கிய அட்டகாசங்களை பயந்த(துணிவில்லாமல்) மனத்துடன் வெட்ட வெளிச்சமாக்கும் பதிவுகள் வலம்வரும்.

முதல் பதிவு.

இது முதல் பதிவு. ஆனால் சத்தியமாக சோதனைப்பதிவல்ல.